ஜிப்பா ஜிமிக்கி ..
கன்னட தயாரிப்பாளர் திவாகர் தன் மகன் தமிழில்தான் களம் இறங்க வேண்டும் என்று ஆசைக்கொண்டு தன் மகன் கிரிஷிக் திவாகரின் அறிமுகத்துக்காக தயாரித்த திரைப்படம்தான் ஜிப்பா ஜிமிக்கி…இயக்குனர் ராஐசேகருக்கு முதல் திரைப்படம்… நாயகி குஷ்பு பிரசாத்துக்கும் இதுதான் முதல் திரைப்படம் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணன் நடராஜனுக்கும் இதுதான் முதல் திரைப்படம்..
ஜிப்பா ஜிமிக்கி திரைப்படத்தின் கதை என்ன??,
எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொள்ளும் நாயகனும் நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பதே இந்த திரைப்படத்தின் கதை..
பால்ய நண்பர்களாக நரேன் மற்றும் மதி கலக்குகின்றார்கள்.. அவர்கள் இயல்பான உடல் மொழி படத்துக்கு பெரிய பலம்.. இரண்டு பேரும் டீக்கடையில் டீ குடிக்கும் காட்சியும்… அதன் பின் நரேன் தன்மகனிடம் நடந்த படி பேசி வரும் அந்த சிங்கிள் ஷாட்எதார்த்தமான காட்சி.
அதே போல இளவரசுவின் பிளாஷ் பேக்கும் அவரின் உடல் மொழியும்அருமை.. மொட்டை ராஜேந்திரன் மற்றும் அவர் மனைவி கவனம் ஈர்க்கின்றார்கள்..
மம்முட்டியை தோளில் வைத்துக்கொண்டு போகின்ற போக்கில் இங்கே கால் டாக்சி கிடைக்காது என்று பேசும் விவசாயி எதார்த்த வாழ்வியலை பேசுகின்றார்..
இது போன்று படத்தில் ரசிக்க தக்க காட்சிகள் உண்டு என்றாலும்… இன்னும் கொஞ்சம் இது போன்ற காட்சிகளை யோசித்து இருந்தால் இந்த திரைப்படம் வேறு ஒரு தளத்துக்கு சென்று இருக்கும்…
அதே போலபுது முக நாயகனுக்கு இன்னும் கொஞ்சம் நடிப்பை சொல்லிக்கொடுத்து இருக்கலாம்.. பார்ன் இன் சில்வர் ஸ்பூன் என்பது பல காட்சிகளில் தெரிகின்றது.. நாயகி குஷ்பு பிரசாத்.. ஏதோ ஒன்று குறைந்தாலும் நன்றாக இருக்கிறார்.. சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்..
ஒளிப்பதிவு மற்றும் லவ் போர்ஷன் அருமை என்றாலும்.. இது மட்டுமே ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ரசிக்க தேவையானவையாக நான் கருதவில்லை.
இயக்குனர் ராஜசேகர் உணர்வு பூர்வமாக திரைக்கதையை காட்சியாக்கும் வித்தை உங்களுக்கு கை வந்துள்ளது…. சினிமாத்தனமாக காட்சிகளுக்கு பதில் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டு இருந்தால் இந்த திரைப்படம் ஒரு படி மேலே சென்று இருக்கும்.
காதலர்கள் போர் அடித்தால் டைம்பாஸ் திரைப்படமாக இந்த திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.
வீடியோ விமர்சனம்.
https://youtu.be/PWhqZ3glt4E