Thiruttu VCD Movie review

1281

wallpapere_1024x768_01

காதல் திரைப்படத்தில்  லலிதா ஜூவல்லரி எதிரில் பொம்மை விற்ற காதல் சுகுமாரை நினைவிருக்கிறதா?? அவர் சில நாட்களாக எந்த திரைப்படத்திலும் காணவில்லை… வடிவேலு போல இருக்கின்றார் என்ற அடை மொழி வேறு காதல் சுகுமாருக்கு உண்டு…

என்னடா ரொம்ப நாளாக திரையில்  ஆளையே காணோம் என்று பார்த்தால்…???? திருட்டி விசிடி   திரைப்படத்தை இயக்கி நிறைய போராட்டங்களுக்கு பிறகு இந்த வாரம் வெளியிட்டு விட்டார்..

நிறைய பிரச்சனைகளை சந்தித்து திரைக்கு வந்து இருக்கும் திரைப்படம் திருட்டு விசிடி.

காதல் சுகுமார் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில்  பிரபா சாக்ஷி அகர்வால், தேவதர்ஷினி போன்றவர்கள்   நடித்துள்ளார்கள்.

சமுத்ரகனி நரேஷனுக்கு குரல்  கொடுத்து இருக்கிறார்.. சீட்டிங் செய்யும் நாயகனிடம்  தென்மாவட்டத்தில் இருந்து ஒரு வேனை கொண்டு வந்து கொடுத்தால் 25 லட்சம் பணம் தருகின்றேன்  என்று ஒரு குழு ஆசைக்காட்ட.. அதை நாயகன் எப்படி செய்து முடித்தான்… அவன் சந்தித்த சிக்கல்கள் என்ன என்பதுதான் திருட்டி விசிடி திரைப்படத்தின் கதை.

லாஜிக் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் கதை…. ஒரு டெம்போ டிராவலர் ஒரு நாலு ஆர்ட்டிஸ்ட்டே போதும் என்றுநினைத்து கதை செய்து இருக்கின்றார்கள்..

பத்திரிக்கையாளர் நண்பர் முருகன் மந்திரம் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார்.

அமெர்சூர்தனமான கதை தேவதர்ஷினி  வரும் சில காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்… செந்தில் கிளைமாக்சில் கிச்சு கிச்சுமூட்ட  ரொம்ப மெனக்கெடுகிறார்..

காதல் சுகுமார் நட்புகள் மற்றும் உறவுகள் கண்டிப்பாக   இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.

Previous articlevijay sethupathi next Kadhalum Kadhanthu Pogum
Next articleJippa Jimikki (aka) Jippa Jimiki movie review