தூங்கா வனம் திரைப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது..
விழாவில் கலந்துக்கொண்ட அத்தனை தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை மேடையேற்றினார் கமல்..
2011 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு திரைப்படமான ஸ்லீப்லெஸ் திரைப்படத்தின் ரிமேக் என்றாலும் இந்த படத்தை தனது உதவியாளர் ராஜேஷ் எம் செல்வத்தை இயக்கவைத்துள்ளார்… ஆனால் விழாவில் கலந்துக்கொண்ட ஒருவரும் அதை பற்றி வாயே திறக்கவில்லை…
பாபநாசம் கொடுத்த வெற்றி கண்டிப்பாக கமலை யோசிக்க வைத்து இருக்க வேண்டும்…மூன்று வருடத்துக்கு ஒரு படம் செய்து ரிசல்ட் என்ன என்று திகிலோடு நகம் கடிப்பதற்கு பதில்.. மூன்று மாதத்துக்கு ஒரு படத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ளலாம்… அது மட்டுமல்ல கமல் பதினாறு வயது பாலகன் அல்ல என்பதை அவரும் புரிந்து வைத்துள்ளார்..
கவுதமி இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனர்… லைட் எலுமிச்சை கலர் சாரியில் விழாவுக்கு வந்திருந்தார்..
விழாவில் முதலில் பேசிய பிரகாஷ்ராஷ் கமலோடு படம் நடிப்பதை விட அவர் செட்டில் அவர் நடவடிக்கையை பார்த்துக்கொண்டு இருப்பதே பாக்கியம் என்றார்..
திரிஷாவுக்கு இது 50 வது படம்… எல்லோருக்கும் வணக்கம் கூறி ஆங்கிலத்தை அழகாகவும் தமிழை கடித்தும் பேசினார்…. அதை விட பிரகாஷ்ராஜை பாய் பிரண்ட் ,செல்லம். என்று வாய்க்கு வந்ததை எல்லாம் வர்ணித்து பார்வையாளர்களையும் மேடையில் உட்கார்ந்து ஒரு சிலரின் வயிற்றெரிச்சலையும் திரிஷா கொட்டிக்கொண்டார். மதுஷாலினிசெமையான காஸ்ட்யூமோடு உட்கார்ந்து இருந்தார்.
மேடையை சுவாரஸ்யமாக்கியது… யூகி சேதுதான்.. நிறைய பேசினார்… ஆனால் பத்து வருடத்துக்கு ஒரு மூறை இது போல மேடை கிடைப்பதால் நிறைய பேசுகின்றேன் என்று பேசினார்.. அன்பே சிவம் வெளிவந்து பண்ணிரண்டு வருடங்கள் ஆகின்றது திரும்பவும் உமா ரியாஸ் யூகி சேது, சந்தானபாரதி, கமல் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்… அதனாலோ என்னவோ உமா ரியாஸ் அளவாக பேசி உட்கார்ந்தார்..
சுகா பேச்சு தன்மையாக இருந்தது… கமல்அண்ணாச்சி என்று அன்போடு அழைத்தார்.
ஜெகன், குரு சோமசுந்தரம்,ஜிப்ரான் போன்றவர்கள்… சத்யா பார்த்து விட்டு இன்ஸ்பயர் ஆனவர்கள் என்று நெகிழ்ச்சியோடு பேசினார்கள்..
வழக்கம் போல கமல் நன்றாக பேசுவார்.. ஆனால் அவர் பேச்சில் சுவை இல்லை.. தெலுங்கு , தமிழை சேர்த்து 14 கோடி மக்கள்…. நல்ல நம்பர்… நிச்சயம் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என்றார்.
விழாவில் அதிகம் மேடை ஏறாத, முகம் காட்டாத அண்ணன் சந்திரஹாசன் அவர்களை மேடையில் ஏற்றி திரிஷா பக்கத்தில் நிற்கவைத்து அழகு பார்த்தார்… தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அசத்தியது டிரைலர்..
துங்காவனம் டிரைலர் பட்டையை கிளப்பியது எனலாம்…. சான்சே இல்லை… டிரைலர் இதோ..