49 O Movie Review

1339

49-o-poster_139150320310

49 ஓ..

பெண்ணின் பின்னால் அலைவதும், காதலை சொல்வதும்தான்…. வாழ்வின் லட்சியம் என்று  குறிக்கோளுடன்   வாழ்வதாக  தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை  சினிமா என்ற பெயரில் பிரதிபலிக்கும்  வழக்கமாக கமர்ஷியல் திரைப்படங்களில் இருந்து 49 ஓ திரைப்படம் முற்றிலும் வேறுபடுகிறது..

ஒரு காலத்தில் சினிமாவில் கலக்கிய கவுண்டமனி நாயகனாக  நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் 49ஓ…

======

49 ஓ திரைப்படத்தின் கதை என்ன?

அவுட்டர் ரிங் ரோடு  விவசாய நிலத்திற்கு அருகே வருவதை தெரிந்துக்கொண்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்  விவசாயிகளின் பொருளாதார  பிரச்சனைகளை முன் வைத்து அவர்களின் விளை நிலத்தை அடிமாட்டு  ரேட்டுக்கு  வாங்குவதோடு அவர்களைஏமாற்றவும் செய்கின்றார்கள்… அதே ஊரில்  வசிக்கும்  விவசாயி கவுண்டமணி  சக விவசாயிகளுக்காக என்ன செய்தார் என்பதே  49 0  திரைப்படத்தின்  கதை..

======

49 ஓ… விவசாயிகளின்  வாழ்வாதாரங்களையும் அவர்கள் படும் துயரத்தையும் முதல் படத்திலேயே பதிவு செய்த இயக்குனர் ஆரோக்கியதாசுக்கு ஒரு பூங்கொத்து..

அதே போல  கிராமம் என்றால்  சாராயக்கடையிலும் டாஸ்மார்கிலும் கிடப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து படத்தில் எந்த   இடத்திலும் டாஸ்மார்க் காட்சிகளை  வைக்காமலும் மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு டேக் லைன் போடாமல் இந்த படத்தை எடுத்து இருக்கின்றார் புது இயக்குனர்…

அதை விட கவர்ச்சியை சுத்தமாக நம்பாமல்…. கமர்ஷியல் அயிட்டங்களை   காம்பரமைஸ்  செய்துக்கொள்ளாமல் படத்தை எடுத்தற்கு வாழ்த்துகள்…

சாம்ஸ் மற்றும்  மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளில்  கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்கள்.

அதே போல குரு சோமசுந்தரம்  வரும்  காட்சிகள் இயல்பு…

சரி படத்தோட மைனஸ் என்னன்னு பார்க்கலாம்…

என்னதான் நாயகன் கவுண்டமணி என்றாலும்.. அவரிடம் எதிர்பார்பது கவுண்டர் டயலாக் டைமிங் டெலிவரியும்தான்….… ஆனால்  புரட்சியாளர் போல நிறைய  கருத்துக்களை பேசுகிறார்.. அதை எத்தனை பேர் ரசிப்பார்கள் என்று தெரியவில்லை.. ஆனால்   இதையே அவர் நகைச்சுவைமூலம்  சொல்லி இருக்கலாம். இன்னும் ரசித்து இருப்பார்கள்..

அதே போல அரசியல் வசனங்ஙகள் நிறைய இடங்களில் ரசிக்க வைக்கின்றன யோசிக்க வைக்கின்றன..  ஆனாலும் ஒரு  ஒட்டு மொத்த திரைப்படத்தையும் ரசிக்க வைக்க வேண்டிய சுவாரஸ்ய எலமென்டுகள் படத்தில் குறைவாகவே உள்ளன என்பதே நிதர்சனம்.

1990 களில் இந்த படம் வந்து இருந்தால் 50 நாட்கள் சர்வ  நிச்சயமாய் ஓடி இருக்கும்…

இந்த படம் நல்ல கருத்துக்களை முன் வைத்தமைக்கு பாராட்டுகளை அள்ளிக்கொடுக்கும் அதே வேளையில்.. நல்ல கருத்தாக  இருந்தாலும் அதனை சுவாரஸ்யம் மிகாமல் கொடுத்து இருக்க வேண்டும்…சுவாரஸ்யம் குறைவு காரணமாக இந்த திரைப்படம் டைம்பாஸ்  திரைப்படமாக பார்க்கலாம்.

 

https://youtu.be/jz2wXsEYZXw

 

Previous articleThoongavanam – Cheekati Raajyam Trailer Launch
Next articledirector Mysskin declares his next project.