“படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்…” அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே இயக்கி வரும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெய் ஹோ’ மற்றும் ‘யார் இந்த முயல் குட்டி’ ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர் அர்மான் மாலிக்கை ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். “அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின் ‘உன் காதல்…’ என்னும் பாப் – மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடலானது தமிழக ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.”கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்
“படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்…” அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே இயக்கி வரும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெய் ஹோ’ மற்றும் ‘யார் இந்த முயல் குட்டி’ ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர் அர்மான் மாலிக்கை ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். “அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின் ‘உன் காதல்…’ என்னும் பாப் – மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடலானது தமிழக ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.