சமீப காலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜி வி பிரகாஷ் இசை அமைக்க யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடல் ஒன்று பதிவானது. இளைஞர்கள் இடையே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
படக்குழுவினரும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் நாளொரு சேதி , பொழுதொரு ‘ எண்ணம்’ என்ற வகையில் படத்தின் சுவையைக் கூட்டி வருகின்றனர். இப்பொழுது யுவன் ஷங்கர் ராஜா பாட , நா முத்து குமாரின் பாடல் வரிகளில் ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’ என்ற பாடல் பதிவானது. ‘ இந்தப் பாடல் நிச்சயம் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமே இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உள்ள துள்ளலை , காட்சியிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் பலித்து இருக்கிறது.
மனிஷா யாதவும் , ஜி வீ பிரகாஷும் சேர்ந்துப் போடும் ‘குத்தாட்டம்’ இப்போ செம்ம ஹிட். பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் தான் எதிரொலிக்கிறது. படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் பெரிதாக உதவும் ‘ என நம்பிக்கை தெரிவித்தார்இயக்குனர் ரவிசந்திரன்
===========
திரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தின் வீடியோ டிரைலர் ரிவியூவ்.