மாரியின் பரியேறும் பெருமாள்

ஒரு கல்லூரியில் நடக்குற கலை விழா….ஒரு அழகான பொண்ணு மொத்த கூட்டத்தையும் அசர வைக்கிற அளவுக்கு ஒரு அருமையான நடனத்த ஆடி முடிக்கிறா….அதுக்கடுத்து ‘எம்பேரு படையப்பா’ பாட்டுக்கு ஒரு சுமாரான பையன் பட்டாசா ஆடி முடிக்கிறான்…..

ஒட்டுமொத்த கூட்டமும் அசந்து போகுது.திடீர்னு கூட்டத்துல இருந்த சில பேரு மின்சாரக் கண்ணா பாட்டுக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா ஆடணும்னு கோரிக்கைய வைக்கிறாங்க….சுமாரான பையனுக்கு மனசுக்குள்ள பயங்கர ஆசை இருந்தாலும்,அந்த பொண்ணு என்ன நினைக்கும்னு நினைச்சிக்கிட்டே நிக்கும்போது,அந்த அழகான பொண்ணு மேடையில ஏறி அந்த சுமாரான பையன பாத்து மேடைக்கு வா னு கைய அசைக்குது…அந்த பையனும் ரொம்ப சந்தோசமா மேடைக்கு போறான்.மொத்த பாட்டுக்கும் அந்த ஜோடி அருமையா ஆடுறாங்க.கடைசியா பாட்டோட முடிவுல ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு முத்தம் கொடுக்குற அந்த வரி வரும்போது…இருந்த மொத்த கூட்டமும் எழுந்து,நம்ம சுமாரான பையன பாத்து அதே மாதிரி முத்தம் கொடுத்துடுடானு கத்துது…அந்த பையன் பதற்றத்துல முழிச்சிட்டு இருக்க சமயத்துல அந்த அழகான பொண்ணு அவன கட்டிபுடுச்சு முத்தம் கொடுத்துட்றா….அவ்ளோதான் நம்ம சுமாரான பையன் அந்த நொடில இருந்து ஹீரோ ஆகுறான்…எல்லாரும் அவன தலைல தூக்கி கொண்டாடிட்டு இருக்கும்போதே…மச்சான் ,வா ல அந்த புள்ளய தேடலாம அப்டின்னு,பல பசங்க கும்பலா அந்த பொண்ணோட அறைக்கு போய்டறாங்க.அந்த பொண்ணு மொத்த மேக்-அப்பையும் கலைச்சதுக்கு அப்பறம்தான் அது பொண்ணு இல்ல ‘கார்த்திக்’ ன்ற ஒரு பையனு தெரிஞ்சது,தூக்கி கொண்டாடுன அத்தன பேரும் மாரிய கேவலமா பாக்குறாங்க.மாரிக்கு ரொம்ப அசிங்கம் ஆகிடுச்சு.அவன் நொந்துப்போயி ஹாஸ்டலுக்கு போய்ட்றான்.

அடுத்த நாள் எங்க போனாலும் மாரிய இத வச்சே எல்லாரும் கேலி பண்றாங்க, மாரியால வெளிய தல காட்ட முடியல.அந்த சமயத்துல கார்த்தி மாரிய நேர்ல சந்துச்சு பேசுறதுக்காக போறான்.அவன் மாரிய பாத்து பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே மாரி முகத்த சுழிச்சிட்டு தயவு செஞ்சு என்கிட்ட பேசாத,பார்க்குறதுக்கெல்லாம் வந்துடாதனு சொல்லிட்டு கோவமா போய்ட்றான்.மாரிய,இந்த மாதிரி பேச வச்சது கார்த்தியோட நடை,உடை,பாவனை இது எதுலயும் பையனுக்கான எந்த அறிகுறியும் இல்லாம இருந்ததுதான்.
ஆனா கார்த்தி திரும்ப திரும்ப மாரிய பார்க்குறதுக்கு வந்து நாள் முழுக்க காத்து கெடக்குறான்,வித விதமா சமைச்சு எடுத்துகிட்டு வர்றான்.ஹாஸ்டல்ல நல்ல சாப்பாட்டையே பாக்காத மாரி சாப்பாட்டுக்காக கெஞ்ச கொஞ்சமா கார்த்திக் கூட பழக ஆரம்பிக்கிறான் .அதுக்கு அப்பறம் அவனுக்கே தெரியாம அவன் நல்ல நண்பன் ஆகிட்றான்.பேசும்போது அப்ப அப்ப கார்த்தி சொல்லுவான்,என்ன ‘கார்த்திகா’னு கூப்டு மாறினு.மாரி சிரிச்சிக்கிட்டே கடந்து போய்டுவான்.

ஒரு நாள் கார்த்தி யாரும் இல்லாத சமயமா பாத்து ,மாரிய வீட்டுக்கு அழைச்சிட்டு போறான்.வீட்டுக்குள்ள போயி கார்த்தி காபி போட்டு எடுத்துட்டு வந்து ,என் தங்க இப்டிதான் காபி எடுத்துட்டு வருவா மாரி,எங்க அம்மா இப்டிதான் புடவ கட்டுவாங்க,எனக்கு கண்ல மை வைக்கணும்,புடவ கட்டணும்,உதட்டுல சாயம் பூசணும்ணு ஆசையா இருக்கு மாரி,ஆனா எங்க வீட்ல என்ன அடிக்கிறாங்க,ஒதுக்குறாங்க எனக்கு யாருமே இல்ல மாரி,நீ மட்டும்தான் இருக்கனு சொல்லி ரொம்ப அழுதான்.

கொஞ்ச நாள் கழிச்சு ஹாஸ்டல் ஃபோனுக்கு வந்த ஒரு கால் மாரிய பஸ் ஸ்டாண்டுக்கு வர சொல்லுச்சு.மாரி போறான்.அங்க கார்த்தி முழு பொண்ணா மாறி நின்னுட்டு இருக்கான்.என்னாச்சுனு மாரி கேக்குறதுக்குள்ள கார்த்தி ஒடஞ்சுப்போய்,என்ன வீட்ட விட்டு போக சொல்லிட்டாங்க மாரி,எங்க வீட்ல உள்ளவங்க என்ன செத்துப்போக சொல்லிட்டாங்க,நா போறன் மாரி,என்ன மாதிரி இருக்கவங்கல தேடி போறேன்,இனிமே நா இங்க வரமாட்டன்,கடைசியா உன்ன மட்டும்தான் பாக்கனும்னு தோனுச்சு மாரி அப்டின்னு சொல்லி அழறான்.கடைசியா மாரிய பாத்து ‘கார்த்தி’கேட்டது…. இல்ல இல்ல ‘கார்த்திகா’கேட்டது ஒரே ஒரு முத்தம் மட்டும்தான்,மாரியும் கட்டி புடிச்சு முத்தம் கொடுக்குறான்..கார்த்திகா ஊர விட்டு போய்ட்றா…

ரொம்ப நாளுக்கு அப்பறம் சினிமா விசயமா ஊருக்கு வந்த மாரி கார்த்தி வீட்டுக்கு போறான்.வீட்டுக்குள்ள கார்த்தியோட படம் பெருசா மாட்டி இருக்கு ….மாரிய பாத்ததும் கார்த்தியோட பெத்தவங்க அவன கட்டிபுடுச்சு…அய்யோ!!….கார்த்தி செத்துட்டான்பானு கத்தி அழுகுறாங்க….மாரி ஒரு நிமிசம் நிதானிச்சிட்டு….கார்த்தி செத்துட்டானு எனக்கு தெரியும்….என் ‘கார்த்திகா’எங்கனு கேட்டுட்டு வெளிய வந்துட்றான்.

அந்த கதையோட கடைசி வரிகள் இதுதான்
‘ரயில்களிலும்,பேருந்துகளிலும் கேட்கும் ஒவ்வொரு கை தட்டலிலும் தேடிக்கொண்டிருக்கிறேன் ,கார்த்திகாவை’.

‘மறக்கவே நினைக்கிறேன்’ல இந்த கதைய படிச்ச பல பேருக்கு இங்க திருநங்கை அப்டினாலே கேவலமா பாக்குற பொதுபுத்தி நொறுங்கிப்போயிருக்கும்…….

இந்த மாதிரி ஒரு தாக்கத்த பரியேறும் பெருமாளும் கண்டிப்பா ஏற்ப்படுத்தும்