நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கும் எலி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடந்தது.
எலி படத்தினை பற்றி மட்டும் கேள்விகளை முன் வைக்க வேண்டும் என்று பிஆர் ஓ நிகில் கேட்டுக்கொள்ள…
படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன் எலி படத்தின் சிறப்புகளை பட்டியல் இட்டார்…
1960 களில் நடப்பது போன்ற கதை என்பதால் நிறைய செட் போட்டு பிரமாண்டமாக எடுத்து இருக்கின்றோம் என்று பேச்சினுடே தெரிவித்தார். அதே போல நடிகை சதா ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாக விஷயம் தெரியாமல் பத்திரிக்கையில் எழுதினார்கள்.. ஆனால் அவர் இந்த படத்தில் பிரதான வேடம் ஏற்று நடித்து இருப்பதாக தெரிவித்தார்..
அதே நேரத்தில் டாக்கிங் டாம் போல ஏலி திரைப்டத்துக்கான மொபைல் ஆப்பினை அறிமுகப்படுத்தினார்கள்.
எலி படம் குறித்த கேள்விகளை சந்திக்க வடிவேலு களம் இறங்கினார்.
நாயகனாகத்தான் நடிக்க வேண்டுமா? என்று கேட்க… ஒரு பெரிய கேப்புக்கு பிறகு வருவதால் ஒரு கவனிக்க தக்க திரைப்படத்தில் நடித்து விட்டு டிராக் காமெடி செய்யலாம் என்று நினைக்கின்றேன் என்று சொன்னார்..
சதாவோடு ஜோடி என்பது குறித்து கேட்டதற்கு கதையில் அவர்கள் ஒரு பாத்திரம்,.. அவரை தூரத்தில் இருந்தே ரசிக்கும் கேரக்டரை செய்து இருக்கின்றேன் .. அது மட்டுமல்ல… 1969 ஆம் ஆண்டு வெளியான ராஜேஷ் கண்ணா நடித்த ஆராதனா திரைப்படத்தில் வரும் மேரே சப்னோகி ராணி பாடலை முறைப்படி அனுமதி பெற்று எலி படத்தில் பயண்படுத்தி இருக்கின்றோம் என்றார்….
எலி திரைப்படம்.. விஜய் நடிக்கும் புலிக்கு போட்டியா என்ற கேள்விக்கு ?ஏங்க கோத்து விடுறிங்க.. ஒருத்தன் சிங்கம் எடுக்கறான் ஒருத்தன் புலி எடுக்கறான்.. நாங்க எலி எடுக்கறோம்.. அது பாட்டுக்கு ஒரு ஓரமா ஓடிட்டு போவுது.. என்று நகைச்சுவையாக சமாளித்து வைத்தார்…
சகாப்தம் படத்தை பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு என் படத்தை பார்க்கவே நேரம் இல்லை என்றும்.. அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு இப்போது அரசியல் கடையை சாத்தி விட்டு நடிப்பு கடையை திறந்து இருக்கின்றேன்… யார் கண்டது எதிர்காலத்தில் எதுவும் நடக்கும் என்று சூசகமாக தெரிவித்தார்…
பத்திரிக்கையார் சந்திப்பை கலகலப்பாக்கின்றார் வைகை புயல் வடிவேல்.