The Admiral: Roaring Currents -2014 movie review

WSdh5uG

இழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை… ஏன் அழுவதற்கு கூட கண்ணீர் இல்லை…

நம்பிக்கை மட்டுமே அவர்களோடு உறவாடிக்கொண்டும் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது.

காரணம் ஏற்கனவே ஐப்பான்காரர்கள் கொரிய மக்களை போர் என்ற பெயரில் துவசம் செய்து விட்டு போய் இருக்கின்றார்கள்.. ஒங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை…. ஊடு கட்டி அடித்து விட்டு சென்று இருக்கின்றார்கள்..

வெளியே சொன்னால் வெட்கம்…

தூக்கத்தில் கூட , கனவில் கூட போர் பற்றிய கலக்கம் இருந்துக்கொண்டு இருக்கும் நேரம்.

1597 ஆம் ஆண்டு 200 கப்பல்களில் வந்து கொரிய மக்களின் பருப்புகளை பரநாட்டியம் ஆட விட்டு இருக்கின்றார்கள்..

பத்தாயிரத்துக்கு அதிகமானோர் உயிர் இழந்திருக்கின்றார்கள்…. நிறைய பேர் படுகாயம் அடைந்திருக்கின்றார்கள்.. அடுத்த போர் என்பதை இன்னும் பத்து வருடத்துக்கு கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத காலகட்டம் அது.…

எல்லோரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் போது மீண்டும் போர் அதுவும் மிகவும் பிரமாண்ட போர்….

திரும்பவும் ஜப்பானியர்கள் கொரியாவை தாக்க போகின்றார்கள் என்ற செய்தியை ஒற்றன் தாங்கி வருகின்றான்…

வெல வெலத்து போகின்றார்கள் கொரிய வீரர்கள்….

போர் செய்தியை கேள்விபட்டதும் ஊசலாடிக்கொண்டுஇருந்த கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் காலாவதி ஆகிக்கொண்டு இருந்தன…. தூக்கம் வராமல் தவித்தார்கள்.. காரணம் அப்படியாகப்பட்டது..

300 கப்பலில் பெரும்படையுடன் ஐப்பானியர்கள், கொரியர்களை தாக்க போகின்றார்கள் என்றால் யார் தான் நடுங்காமல் இருப்பது…
காரணம் இருக்கின்றது…

கொரியர்களிடம் பாரிய இழப்பு காரணமாக வேறும் 12 கப்பல்கள்தான் இருக்கின்றன….

ஒற்றன் கொண்டு வந்த செய்தி உண்மை…

அதில் எந்த சந்தேகமும் இல்லை..

எப்போது வேண்டுமானாலும் ஜப்பானிய வீரர்கள் பிரட் ஆம்லேட் சாப்பிட்டு விட்டோ …அல்லது வாயில் குதப்பிக்கொண்டோ போர் கப்பலில் ஏறி சண்டைக்கு கிளம்பி வரலாம்

என்ன செய்வது…ஒரே ஒரு கடற்படை தளபதி…

ஆனால் அவருக்கும் வயதாகி விட்டது…

உடல்நிலை சரியில்லை..

நாட்டுக்காக நிறைய இழந்திருக்கின்றார்… சித்ரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்.

கூடவே இருந்து குழிப்பறிக்கும் கூட்டம் ஒரு புறம்..

நம்பிக்கையற்ற போர் வீரர்கள் மறுபுறம்…

போர் கன்பார்ம்…

8-18_roaring_currents_1

300 கப்பல்களிலும் வெடிபொருட்களும் சோத்து மூட்டைகளும் ஏற்றியாகி விட்டது என்னும் செய்தி கன்பார்ம்…

எந்த நேரத்திலும் 300 கப்பல்களின் அனுவகுப்பை பரவசத்தோடும் பயத்தோடும் பார்க்கலாம்…

சரி உயிர் இருக்கும் வரை போராடுவோம்… ஒரு பிரமாண்ட கப்பலை கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்… அந்த கப்பல் மட்டுமே அவர்கள் நம்பிக்கை..

300 கப்பலில் வந்து ராட்சதனமாக தாக்கும் போது, கொஞ்சம் சுதாரித்து இரண்டு பேரையாவது நாட்டுக்காக போட்டு தள்ளி விட்டு உயிர் விட அந்த கப்பல்தான் ஒரே நம்பிக்கை…

ஆனால் பாருங்கள்… அந்த கப்பலும் எதிரிகளால் எரிக்கப்படுகின்றது….

ஒரே நம்பிக்கையும் புஸ் ஆகி விட்டது..

12 கப்பல்கள்..

நம்பிக்கை இல்லா வீரர்கள்..

அவநம்பிக்கையான உப தளபதிகள் ((பின்னே300 கப்பல் முழுக்க எதிரிகள் என்றால்..?? சும்மவா??))

ங்கோத்தா உடம்பில் உயிர் இருக்கும் வரை என் தாய் நாட்டின் சிறுபாகத்தையும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று கர்ஜிக்கும் கிழட்டு தளபதி.
அவன்தான்இந்த படத்தின் நாயகன்…

கொரியாவில் 1597 ஆம் ஆண்டு Myeongnyang Strait பகுதியில் நடந்த ,ரத்தமும் சதையுமான நிஜமான யுத்தத்தில் ஜப்பானிய வீரர்கள்.. 300 கப்பல்களில் கொலைவெறியோடு கொரிய வீரர்களை தாக்க வந்த போது….சூத்துல கால் படற அளவுக்கு ஜப்பான் வீரர்களை வெறும் 12 கப்பல்களில் இருந்து கொரிய வீரர்கள் எப்படி புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டினார்கள் என்பதுதான் தி ஆட்மிரல் கொரிய படத்தின் வரலாற்று உண்மைக்கதை..

the-admiral-roaring-currents
சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் எனக்கு மிகுந்த பிரமிப்பை உண்டாக்கிய கொரிய திரைப்படம் அட்மிரல்.

இந்த படத்தை எனக்கு வழக்கம் போல அறிமுகப்படுத்திய தம்பி ரமேஷூக்கு என் நன்றிகள்..

வரலாற்று களம்… உண்மைகதை…

ஆனால் நம்ப வைக்க வேண்டும்…

அவநம்பிக்கையை வீரத்தை காட்களில் கொண்டு வர வேண்டும்… அதற்கு அற்புதமாக நடிகர்களி ஒத்துழைப்பு மிக அவசியம்..
Yi Sun-sin கடற்படை தளபதியாக Choi Min-sik நடித்து இருக்கின்றார்.. ஓல்டுபாய் திரைப்படத்தில் 14 வருடங்கள் பூட்டப்பட்ட அறையில் இருப்பாரே அவரேதான்..

மனிதன் பின்னி இருக்கின்றார்…. படத்தின் மிகப்பெரிய பலமே Choi Min-sikதான்… நிதானமான பாடிலாங்வேஜ், கர்ஜிக்கும் போது தளபதிக்கான உடல் மொழி என்று அசத்துகின்றார்….

அவர்தான் படம் முழுவதும் வியாபித்து இருக்கின்றார்.. அவர்தான் படத்தை தன் நடிப்பால் காப்பாற்றுகின்றார்…

படத்தின் இயக்குனர்Kim Han-minவை எவ்வளவு பாராட்டினாலும்தகும்… அப்படியானஇயக்கம் அது மட்டுமல்ல… இந்த படத்தை அவரே எழுதி இயக்கி தாயரித்தும் இருக்கின்றார்கள் என்பது கூடுதல் செய்தி.

=======
படத்தின் டிரைலர்..

=========
படக்குழுவினர் விபரம்.

Directed by Kim Han-min
Produced by Kim Han-min
Written by Jeon Cheol-hong
Kim Han-min
Starring Choi Min-sik
Ryu Seung-ryong
Music by Kim Tae-seong
Cinematography Kim Tae-seong
Edited by Kim Chang-ju
Production
company
Big Stone Pictures
Distributed by CJ Entertainment
Release dates
July 30, 2014
Running time
127 minutes
Country South Korea
Language Korean
Japanese
Budget US$18.6 million
Box office US$135.9 million

===========
பைனல்கிக்.

பிரீயட் பிலிம்… அதுவும் வார் திரைப்படம் நிறைய மெனக்கெட்டுஇருக்கின்றார்கள்… அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள்..
சவுத் கொரியாவில் வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படலிஸ்ட்டில் இந்த திரைப்படமும் தனக்கான இடத்தை பிடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்…

மிக முக்கியமாக கடைசி போர் காட்சிகள் சான்சே இல்லை… அசத்தி இருக்கின்றார்கள்… ஹாலிவுட்டையே நடு நடுங்க வைத்து இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்…

யம்பா இந்த படத்தை எல்லாம் ரைட்ஸ் வாங்கி தமிழ்ல போட்டா… கண்டிப்பா கலெக்ஷ்ன் கல்லா கட்டும்பா…? இது ஏன் இங்க இருக்கும் தயாரிப்பு தரப்புக்கு புரிய மாட்டேங்குதுன்னு தெரியலை…???

இந்த படம் கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் என்ற பரிந்துரைக்கின்றேன்..

==============
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டு.

=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
ஜாக்கி சினிமாஸ் யூடியூப் தளத்தையும் இணையதளத்தையும் நண்பர்களிடத்தில் அறிமுகப்படுத்துங்கள்.
==========