அனிமல் டீசர் வெளியானது ! சரவெடி அதிரடி விருந்துக்கு தயாராகுங்கள்!

 

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஒரு சுருக்கமான பார்வையுடன், படத்தின் அதிரடியான களம், உயிர்ப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்பட்டுள்ளது. நட்சத்திர நாயகன் ரன்பீர் கபூரின் பிறந்தநாள் சிறப்பாக, டீஸர் வெளியிடப்பட்டிருப்பது, கூடுதல் உற்சாகத்தை சேர்க்கிறது. ‘அனிமல்’ என்பது ஒரு புதுமையான அதிரடியான திரை அனுபவம், இது சுவாரஸ்யமும் ஆர்வமும் இணைந்து நீங்கள் நினைத்து பார்த்திராத பயணத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும். இந்த திரில்லர் டிராமா திரைப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். அனில் கபூர், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

உங்கள் காலெண்டரில் குறித்து வைத்து கொள்ளுங்கள், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘அனிமல்’ திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு புதுவிதமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்

‘அனிமல்’ படத்தை பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.