தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் கமல் நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற முந்தைய படங்கள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.அதே போல மீண்டும் கமலை வைத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுப்பார் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில்  கமலின் 233 படத்தின் ஸ்டண்ட் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

Previous articleபவர் ஸ்டார் பவன் கல்யாண் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
Next articleஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் 800 பட பத்திரிகையாளர் சந்திப்பு!