90 களில் காதல் மன்னனாக வலம் வந்த ஷாருக்கானை “ஹைய்யோடா” பாடல் மூலம் மீண்டும் அதே வசீகரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்!

மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில், ‘ஹைய்யோடா’ பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை தூண்டும் மேஜிக்கை கொண்டுள்ளது. இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கத்தை, அந்த மாயாஜாலத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளது. இதயத்தை வருடும் மெல்லிசை, ரொமான்ஸில் கலக்கும் ஷாருக் என இந்தப்பாடல் பெரு விருந்தாக அமைந்துள்ளது.

நடிகர் ஷாருக்கானும் நயன்தாராவும் முதன்முறையாக இப்பாடலில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர் ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில், ஒரு அற்புதமான பாடலாக வந்துள்ளது. ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான குரலுக்கு பொருந்தும் வகையில் ப்ரியா மாலி அழகாக பாடியுள்ளார், இதயத்தில் புகுந்து, ஆழமான ஆசைகளை தூண்டி விடும், அன்பின் சக்தியை அதன் தூய்மையான வடிவத்தை அழகாக பிரதிபலிக்கிறது இந்த பாடல்.

 

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Previous articleநடிகர் அசோக் செல்வனின் திருமண செய்தி ! இந்த பிரபலத்தின் மகளை தான் கரம் பிடிக்கப்போகிறாராம்!
Next article‘சீதா ராமம்’ படத்திற்கு மெல்ஃபெர்னில் சர்வதேச விருது ! மகிழ்ச்சியில் படக்குழுவினர்!