வெளியானது பிரைம் வீடியோவின் தமிழ் குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் டிரெய்லர்!

 

இந்தியாவின் மிகவும் அதிகளவில்  விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, வரும்  ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படவிருக்கும் ஒரிஜினல் தமிழ் தொடரான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. ரேஷ்மா கட்டாலா (Reshma Ghatala) உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு லக்ஷ்மி (Lakshmi), மது (Madhoo), மற்றும்  சாந்தி (Santhy)  நடித்துள்ள இந்த  மனதுக்கு உற்சாகமளிக்கும் தொடரை பிஜாய் நம்பியார், (Bejoy Nambiar), கிருஷ்ணா மாரிமுத்து (Krishna Marimuthu), மற்றும்  சுவாதி ரகுராமன் (Swathi Raghuraaman) ஆகியோர் இயக்கியுள்ளனர்.

உலகெங்கிலும் 240 க்கும் அதிகமான  நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஜூலை 6  முதல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட  இந்த தமிழ் தொடரை  ஸ்ட்ரீம் செய்யலாம். ஸ்வீட் காரம் காபி  தொடரானது  பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில்  கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள்,  ஒரே ஒரு முறை உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி  பணத்தை சேமிப்பதோடு, இதர வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும்  அனுபவித்து மகிழலாம்.

Sweet Kaaram Coffee Web Series (2023) Online on Amazon Prime Video - News Bugz

இயக்குனர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, மற்றும் சுவாதி ரகுராமன் வெவ்வேறு எபிசோடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, தங்களின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும்  சிறப்பான திறன்கள் மூலம் ஒன்றிணைந்து இந்த கதையை தங்கு தடையின்றி மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் காட்சிப்படுத்தி உயிர்பெறச் செய்திருக்கிறார்கள்.

“நாடு முழுவதையும் சுற்றிவரும் ஒரு பயணத்தை – ஒரு இளம் பெண், அவளுடைய தாய் மற்றும் அவளுடைய பாட்டி – தொடங்கும் மூன்று தனித்துவமான, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களோடு, சேர்ந்து கொள்ள பார்வையாளர்களுக்கு ஸ்வீட் காரம் காபி அழைப்பு விடுகிறது. ஒவ்வொரு பெண்ணும்  தங்களை தனிப்பட்ட முறையில் கண்டறியும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள், மேலும்தங்களை கண்டறியும்  அவர்களின் இந்த சாகசப் பயணத்தின் இடையில்