உலகம் முழுவதும் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் போன்றவை திரையிடப்படுகின்றன. அந்தவகையில் அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’, ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’, மணிப்பூரில் 1990-ல் வெளியான ‘இஷானோ’ ஆகிய மூன்று இந்தியப் படங்கள் திரையிடப்படுகின்றன.
அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படத்தில் சன்னி லியோன் நடித்திருப்பதால் அவரும் இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தனது சினிமா வாழ்க்கை குறித்து சன்னி லியோன் பேசியிருக்கிறார். “ஆரம்பத்தில் நான் ப்ளூ ஃபிலிம்களில் நடித்து வந்தேன். அதன்பின் திரையுலகிற்கு நடிக்க வந்தேன். அப்போது நான் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை கலந்துகொள்ள அழைத்தார்கள். ஆனால் நான் இந்தியாவிற்கு வர மறுத்து விட்டேன். என்னுடைய கணவர் டேனியல்தான் என்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். என்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்ததும் அவர்தான்.
அந்நிகழ்ச்சியின் மூலம்தான் என் மீது இருந்த தவறான பார்வை நீங்கியது. என்னையும் ஒரு நடிகையாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நான் சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் எனக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்தன. என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்றும் பலர் மிரட்டி இருக்கின்றனர். அதையும் தாண்டி நான் தற்போது ஒரு நல்ல நடிகையாக உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றனர்” என்று சன்னி லியோன் பேசியிருக்கிறார்.