நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

 

“நடிகர் கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்’ கதையைக் கேட்டார் அந்த கதை பிடித்து போனதும் உடனே அதில் நடிக்க சம்மதித்தார்.

இந்த படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்துள்ளார் . படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

கவுண்டமணி, தயாரிப்பாளர் மதுரை செல்வம், நடிகர் ரைடர் ரவி

இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில் அவர் கழுதை மேய்ப்பவராக வருகிறார். 35 கழுதைகளை படத்தில் பயன்படுத்த உள்ளனர். முதலில் இந்த கதையை செல்வ அன்பரசன் என்பவர் இயக்குவதாக இருந்தது. இப்போது அவர் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக பெரிய இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிரறது.