பெயரால் எந்த படமும் ஜெயிக்காது நல்ல கதை இருக்க வேண்டும் ரஜினி இசை வெளியீட்டு விழாவில் K.ராஜன் பேச்சு..

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ரஜினி’ திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர்  கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில்  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான்,  கல்விதந்தை AC சண்முகம், இயக்குநர் RV உதயகுமார்,  T. சிவா, , நடிகர்  ஜீவன், அடி தடி முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை,  உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது…
சினிமாவில் மாவீரன், மகா தைரியசாலி தயாரிப்பாளர் பழனிவேல் தான். கொரோனா கடின காலத்திலும் இரண்டு படங்கள் எடுக்கிறார். இயக்குநர் A.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குநர், மக்கள் விரும்பி பார்க்ககூடிய படங்களை கமர்ஷியலாக தரக்கூடியவர் இருவரும் இணைந்து ஒரு நல்ல படம் தருகிறார்கள். ரஜினி என பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள் இல்ல பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது கதை இல்லாவிட்டால் எந்த பெரிய நடிகர் படமும் ஜெயிக்காது. கதை தான் முக்கியம்.  A.வெங்கடேஷ்  கண்டிப்பாக கதை வைத்திருப்பார். நாயகனுக்கு உண்டான் எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. அந்த தம்பியை பார்க்கும் போதே ஒழுக்கம் நிறைந்தவர் என தெரிகிறது. தயாரிப்பாளரை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள், எல்லோரும் நல்லா வர வேண்டும் அதே நேரம் தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார். சேலை கட்டிய தமிழ் பெண்ணாக மாறுங்கள் தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும்.இப்போது கதை இல்லாமல்  சமீபத்தில் வந்த பிரமாண்ட படமெல்லா  ஹீரோ காலி. ஆனால்    A.வெங்கடேஷ் கதை இல்லாமல் படமெடுக்க மாட்டார். இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.