இயக்கம் – ராஜேஷ் எம் செல்வா
நடிப்பு – சரத்குமார், அபிஷேக், ஶ்ரீஷா,கௌரி நாயர்
இரை புதிதாக தமிழுக்கு வந்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள முதல் இணைய தொடர்.
சரத்குமார் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்க பேர்ட்ஸ் ஆஃப் பிரே நாவல் இரையாக மாறியிருக்கிறது.
ஹாலிவுட்டில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும் ஒரு வயதான அதிகாரி அவரிடம் ஒரு கேஸ் வரும் அதை அவர் விசாரிக்க ஆரம்பிக்கையில், ஏதோ ஏதோ மர்மங்கள் விடுபடும். இந்த பாணி இதுவரை தமிழில் வந்ததில்லை ஆனால் அந்த ஆசையை போக்கும் வகையில் வந்திருக்கிறது இரை.
சரத்குமார் ஓய்வில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி அரசியல் கட்சி புரோக்கர் ஒருவர் கடத்தப்பட அவரை கண்டுபிடிப்பதற்காக சரத்குமார் கொடைக்கானல் வருகிறார் ஆனால் அது ஒரு பெரிய குழந்தை கடத்தல் கேஸில் கொண்டு விடுகிறது. அது என்ன என்பது தான் கதை.
சமூகத்தில் நம்மை சுற்றி நிறைய கெட்ட விசயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது அதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வாக வந்திருக்கிறது. பல மிருகங்களின் இரை நாம் என்பது தான் இந்த இரை.
இணைய தொடர் இப்போது தான் தமிழில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இணைய தொடரின் அர்த்தம் புரிந்து அதற்காக திரைக்கதையில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். இரண்டு காலகட்டங்களில் கதை நடப்பதும் அதை இணைப்பதும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
சரத்குமார் அமைதியான அதே நேரம் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார். அவர் கண்டிபிடிக்க ஆரம்பிக்கும் போது நாமும் அவருடனே பயணிக்கிறோம்.
அபிஷேக்,ஶ்ரீஷா, பிரவீன் என இதில் வரும் எல்லா நடிகர்களுமே அசத்தலான நடிப்பை தந்துள்ளார்கள்
கேமரா கொடைக்கானல் அழகை காட்டுவதுடன், பரபரப்பையும் காட்டியுள்ளது. எடிட்டிங் நிதானம் காட்டி கதை சொல்லியுள்ளது. தொடரில் வரும் டீடெயில் ஒர்க் கதையின் நம்பகத்தன்மையை கூட்டியுள்ளது.
இரை ஒரு நல்ல பொழுது போக்கு தொடர்