புற்று நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிபோர் யூ டை (Before you die) !

இன்ஸ்டிடியூட் ஆஃப் லீடர்ஷிப் எண்டர்ன்ப்ரெனர்ஷிப் அண்ட் டெவலப்மென்ட் (iLEAD) பிரபல இயக்குனர் சுவேந்து ராஜ் கோஷின் இயக்கத்தில் ‘பிஃபோர் யூ டை’ திரைப்படத்தை வெளியிட்டுள்ளது, இது புற்றுநோயின் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் வங்காள சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வங்காளத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெங்காலி கலைஞர்களைக் கொண்டு ilead இந்தி திரைப்படத்தை உருவாக்கியுள்ளது இந்த படம் வங்காளத்தில் உள்ள பல்வேறு பயண இடங்களை பிரமாதமாக சித்தரித்திருக்கிறது. இது டார்ஜிலிங், முர்ஷிதாபாத் போன்ற பல இடங்களில் வங்காளத்தின் மிகப் பெரிய திருவிழாவான துர்கா பூஜை மற்றும் வங்காளத்தின் வளமான கலாச்சாரத்தை இப்படத்தின் வழியாக அழகாக சித்தரித்துள்ளது. இந்த படத்தில் ஜாய் நகரம், பேரார்வம் நகரம், கொல்கத்தா அழகாக காட்டப்பட்டுள்ளது. இந்த படம் வங்காளத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை, வாழும் வாழ்நாளை அர்த்ததுடன் கொண்டாட்டமாக வாழ்வோம் எனும் கருத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 6 மாதங்கள் மட்டுமே உயிர் பிழைக்கும் சாத்தியம் கொண்ட புற்றுநோய் தாக்கிய பெண் தான் இப்படத்தின் நாயகி, அவள் எல்லோரிடத்திலும் இருந்து ஒதுங்கி நிற்கிறாள் ஆனால் அவளை விரும்புவன் ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைக்கிறான். நீ எனக்கு முன்னால் இறந்து விடுவாய் என நினைக்கிறாய் ஆனால் மரணம் என்னை தொட்டு விட்டு போகிறது மரணம் நம் கையில் இல்லை என சொல்லி புரிய வைக்கிறான். அவளுடன் மீதி நாட்களை கொண்டாட்டமாக வாழ ஆரம்பிக்கிறான். அவர்கள் இரண்டாம் பாதியில் ஒரு கொண்ட்டாமான பயணத்தை மேற்கொள்கிறார்கள். வாழ்நாளில் தான் ஏங்கிய வாழ்வை அவள் வாழ்கிறாள்.

வாழ்க்கை நம்மை மீறியது அதை சிக்கலாக்கி கொள்ளாமல் வாழ்வை கொண்டாடுவோம் புற்றுநோய் பாதித்தவர்கள் மனம் உடைந்து போகாமல் இருக்கும் வாழ்வை கொண்டாடலாம் என்பதை அழகாக சொல்கிறது இந்தப்படம் .