பரதராமி இது தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது . இங்கு வாரந்தோறும் ஆடு, மாடு, கோழிகள், விற்பனை செய்யும் சந்தை கூடுகிறது. அதனை தொடர்ந்து விவசாய உற்பத்தி பொருள்கள் காய், கனி, கீரைகள், தானியங்கள் விற்பனை சந்தை நடைபெறுகிறது. இந்த வார சந்தையின் போது பரதராமி சுற்றுப்புற கிராம, நகர மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்கின்றனர்…
இந்த சந்தையைப்பற்றி கேள்விப்பட்ட ஆறுபடையப்பா ஸ்க்ரீன்ஸ் படக்குழுவினர் இந்த சந்தையின் பின்னணியில் தாம்பூலம் படக்காட்சியை படமாக்கிட திட்டமிட்டனர் சந்தை கூடும் இடத்திற்கு வருகை தந்தனர், படப்பிடிப்பு குழுவினர். பொதுமக்கள் கரம்கூப்பி வரவேற்றனர் பொதுமக்களின் ஆதரவுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
“தாம்பூலம்” படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி படத்தினை இயக்குகிறார் பாரதிராமன்,
படத்தில் நாயகியாக ஹீமா பிந்து, ரஷ்மி, வர்ணிக்க மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர், ஹீமா பிந்து முறைப்படி கராத்தே கற்றவர், ரஷ்மி மாடலிங், வர்ணிக்க முறையாக நடனம் கற்றவர், நாயகர்களின் ஒருவரான சச்சின் புரோகித் ஏற்கனவே கன்னட படங்களில் ஸ்டுடன்ஸ், கடிகார உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பாராட்டுப்பெற்றவர்.
இவருடன் ஸ்ரீனிவாசன், காந்தராஜ், மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதையின் பின்னணி குடும்ப பாங்கான படங்கள் அத்தி பூத்தார் போல எப்போதாவது ஒன்று வருகின்றன “தாம்பூலம்” அக்குறையை நீக்கி குடும்பப்பாங்கான வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் இப்படத்தில் இடம்பெறும் நான்கு இளைஞர்கள் குறிக்கோள் எதுவுமின்றி சேட்டையில் திரிந்து வருகின்றனர் இவர்களின் சேட்டையால் ஒரு இளம் பெண் பாதிக்கப்படுகிறாள் இது இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது அதன் விளைவு என்ன என்பதன் பின்னணியில் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தினை சொல்லும் படமாக “தாம்பூலம்” வருகிறது
“தாம்பூலம்” படத்தினை பூங்கோதை தயாரிக்கிறார், ஒளிப்பதிவு கணேஷ் ராஜா, இசை கனடா தமிழர் கபிலேஷ்வர், எடிட்டிங் இளங்கோ, நடனம் நசீர் பாபு பரதராமி
வேலூர், ஏலகிரி, ஊட்டி, பெங்களூர் போன்ற இடங்களில் “தாம்பூலம்” படப்பிடிப்பு நடந்து வருகிறது.