கடைசி எச்சரிக்கை… பாடல்களை வெளியிட்டு வாழ்த்திய ஜி வி பிரகாஷ்!

கடைசி எச்சரிக்கை படத்தின் பாடலை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார்.

சுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 35 நிமிட குறும்படம் கடைசி எச்சரிக்கை.

டவுட் செந்தில் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார்.

படத்தின் முதல் டீசரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார். இந்த நிலையில் படத்தின் பாடலை இசையமைப்பாளரும், முன்னணி நடிகருமான ஜி வி பிரகாஷ்குமார் நேற்று மாலை வெளியிட்டு வாழ்த்தினார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான படம் கடைசி எச்சரிக்கை என்று ஜி வி பிரகாஷ் பாராட்டு தெரிவித்தார்.

ஜி வி பிரகாஷ் வெளியிட்ட ‘கடைசி எச்சரிக்கை…’ பாடலை, ஆண்டனி தாஸ், பிரசன்னா மற்றும் சத்ய பிரகாஷ் பாடியுள்ளனர். பாடலை சுகுமார் கணேசன் எழுதியுள்ளார். AIS நோபல் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்திற்கு வி சந்திர சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை ஏ மாரியப்பன், மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர். தயாரிப்பு வி சீனிவாசன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் சுகுமார் கணேசன்.

 

https://www.youtube.com/watch?v=7IrdEVEfkes