உலகத் திரைப்பட விழாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பரியேறும் பெருமாள்

கோவா உலகத் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படமும் திரையிடப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த திரைப்பட விழாவிற்க்கு வந்திருந்த ரசிகர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படம் பார்த்துவிட்டு எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரத்தோடு படக்குழுவினரை உற்சாகப்படுத்தினர்.

குறிப்பாக படம் முடிந்து வந்த பார்வையாளர்கள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் உள்ளிட்ட குழுவினரை கட்டிப்பிடித்து பாராட்டினர். மிகச்சிறந்த திறைப்படத்தை உருவாக்கியதற்க்கு வாழ்த்துக்கள் இந்தப் படம் இன்னும் பல்வேறு விருதுகளைப் பெறும் என்று பாராட்டினர்.

மொழி தெரியாவிட்டாலும் இந்த படத்திலிருக்கும் வலியை புரிந்துகொள்ள முடிகிறது , இந்தியாவில் சாதி எவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது என்று வெளி நாட்டு ரசிகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.