துலாம் படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டிய சோனியா அகர்வால்!

வி மூவி சார்பில் விஜய் விகாஸ் துலாம் படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகை சோனியா அகர்வால், இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தார். ‘எங்கு இருந்தாய் நீ எங்கு இருந்தாய்’ என்ற பாடலும், அம்மாவை பற்றிய ‘பெத்த உசுரு ரத்த உசுரு’ என்று தொடங்கும் பாடலை மிகவும் கேட்டு ரசித்தவர் அன்னையை நேசிக்கும் அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும் என்றார்.

மேலும் கானா பாலா பாடிய ‘ஜிகினா,ஜிகினா’ என்ற பாடல் அனைவரையும் குத்து ஆட்டம் போடவைக்கும் என்றுகூறி இசையமைப்பாளர் அலெக்ஸ் பிரேம்நாத்தை வாழ்த்தினார்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்

” இந்தப் படத்தின் கதைக்கரு இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை கொண்டது.அதே சமயம் இன்று சட்டம் என்பது எப்படி இருக்கிறது சமூகத்தில் இன்று அப்பாவிகள் சட்டத்தினால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்தஸ்தில் உள்ளவர்கள் சமூகத்தில் பெரும் குற்றங்கள் செய்துவிட்டு எளிதாக அதிலிருந்து எப்படி தப்பித்து கொள்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. இப்படத்தில் நாயகனாக விவாத் ,நாயகியாக ஜெயஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் மனோபாலா, சிவா பொன்னம்பலம்,மணிமாறன்,அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர்

இப்படத்திற்கு ஒளிப்பதிவு கொலஞ்சி குமார் இசை அலெக்ஸ் பிரேம்நாத்.படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்.பாடல்கள் நா.முத்துக்குமார்,
கானா பாலா, விஜயகுமார்.

இது ஒரு மிகசிறந்த படமாக இருக்கும் என்று பிரபல கதாநாயகி நடிகை சோனியா அகர்வால் அவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டினார்…