2017 ஆம் ஆண்டு இறுதியில் நான் பார்த்த அருமையான படம் தி மவுன்டென் பிட்வின் அஸ்.
போஸ் ஏர் போர்ட் பரபரப்பாய் இயங்குகின்றது… பத்திரிக்கையாளர் அலெக்ஸ் என்கின்ற அவளுக்கு நாளை கல்யாணம்…
டாக்டர் பென் என்ற அவனுக்கு ஒரு முக்கியமான ஆப்பரேஷனுக்கு நேரம் குறித்து இருந்தார்…
இரண்டு பேருமே பால்டிமோர் ஏர் போர்ட் போக வேண்டும்… வானிலை மோசம்காரணமாக எல்லா பிளைட்டும் கேன்சல்…
நம்ம ஊரில்தான் கல்யாணம் என்றால் மணப்பெண்ணுக்கும் மண மகனுக்கும் காப்பு கட்டி விட்டால் ஆற்றைக்கூட கடக்கக்கூடாது என்று சொல்லி விடுவார்கள்.
அங்கே மலையையே தாண்டலாம்… இரண்டு பேரும் அவசியம் போய் ஆக வேண்டும்.. ரெண்டு பேரும் ஷேர் ஆட்டோ பிடிப்பது போல சிறிய ரக விமானம் ஓட்டும் ஒரு வயதான பைலட்டை பிடித்து தங்களை பால்டி மோர் ஏர்போர்ட்டில் விட்டு விட சொல்கின்றார்கள்…
மீட்டருக்கு மேல் போட்டுக்கொடுக்க சொல்லி நச்சரிக்காமல் இரண்டு பேருக்கு 800 டாலர் விலை பேசி அவரும் ஒத்துக்கொள்கின்றார்…
அலெக்ஸ் மற்றும் பென்… அப்புறம் பைலட்டின் நாய் பைலட் என நால்வரும் அந்த சிறிய ரக விமானத்தில் பறக்கின்றார்கள்..
வானிலை மோசம்தான் அதை விட பைலட்டுக்கு நெஞ்சு வலி வந்து 13 ஆயிரம் அடி உயர பனி மலையில் விமானத்தை மோத விட்டு பரலோகம் சென்று விடுகின்றார்…
அலக்சாக கேத்துக்கும் பென்னாக இட்ரிஸ் எல்பாவாக நடித்து இருப்பார்கள்…
சோ உயிர் பிழைத்தது… நாயும் அலெக்சும் பென்னும்தான்.. மூன்று பேர் உதவிக்கு யாரும் இல்லை.. கால் உடைந்த அலெக்ஸ், குறைவான உணவு… வெளியே பனிப்புயல்…
தனியாக அந்த பனிமலையில் உடைந்த பெண்ணை விட்டு விட்டு அந்த மருத்தவர் தப்பிக்க நினைத்து இருந்தால் தப்பித்து இருக்கலாம்… ஆனால் அவன் தப்பிக்கவில்லை.. அவ்வளவு ஏன் அவளை விட்டு அவன் விலகவே இல்லை….
ரொம்ப சாதாரண படம்தான்.. ஆனால் கடைசி பதினைந்து நிமிடம் இந்த படத்தை கொண்டாட தோன்றுகின்றது…
முக்கியமாக காதலைக்கொண்டாடியவர்களுக்கு…..
இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பது ஜாக்கிசினிமாசின் பரிந்துரை.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
குறிப்பு இந்த எபிசோட்டுக்கு என் மனைவிதான் கேமரா உமன்… இந்த எபிசோட்டை எடுத்து முடிக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சி.. அதுவும் ஒரு டூவிலர் காரன்… வேணும்ன்னே எங்களை வீடியோ எடுக்க விடாம ஹாரன் அடிச்சி டார்ச்சர் பண்ணான் பாருங்க…. வீடியோ பாருங்க அப்ப தெரியும்.
https://www.youtube.com/watch?v=LqgVjCAmsIU