இன்று நோ பிரா டே

இன்று #நோபிரா டே.
விவஸ்த்தையே இல்லை எது எதுக்கு நாள் கொண்டாடுறதுன்னு ஒரு விவஸ்த்த மயிரே இல்லாம போச்சி கருமம் கருமம் என்று அக்கலாய்ப்பவராக இருந்தால் உடனே அப்பிட்டிக்கொள்ளவும்.

நோ பிரா டே என்பது ஒரு நாள் உள்ளாடை அணியாமல் இருக்கும் நாள்… ஏன்—? அப்படி அணியாத போது உங்களுக்கு மார்பக புற்றுநோய் இருக்கின்றதா? என்று சுயபரிசோதனை செய்துக்கலாம் இல்லையா?

அதுக்குதான் இந்த நோ பிரா டே…

வருடத்துக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்று நோய்க்கு ஆளாகின்றார்கள்.
மிக முக்கியமாக 2800 பேர் வருடத்துக்கு அயர்லாந்து நாட்டில் மட்டும்…

என்றாவது மார்பக பரிசோதனை என்பதை யாரும் அவ்வளவு சீரியசாக செய்துக்கொள்வது இல்லை.. அதனை நினைவுட்டும் பொருட்டே அக்டோபர் 13 நோ பிரா டே என்று கொண்டாட்டத்துடன் நினைவு படுத்துகின்றார்கள்… நாளை உலக மார்பக புற்றுநோய் தினம்.

காதலன் இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?
காதலி தெரியாது…
நோ பிரா டே..

அப்படின்னா..

பிரா போடாம வரனும் என்று காதலன் சொனனால்……

இந்த சனியனுக்கு இது எப்படி தெரியும் ? என்று ஆராயும் போது…. மார்பக புற்றுநோய் மற்றும் சுய பரிசோதனைகள் எல்லாம் தெரியவரும்…

ஆகையால் இன்று நோ பிரா டே என்று காதலி பிரா போட்டு இருந்தாலும் நாளின் பிரச்சனையின் தீவிரத்தை விளக்கி அவளை டெஸ்ட் செய்துக்கொள்ள சொல்லுங்கள்.

. அது மட்டுமல்ல வீட்டு பெண்கள் அம்மா அக்கா தங்கை காதலி மகள் என்று எல்லோருக்கும் ஒரு வார்த்தை சொல்லி வையுங்கள்.

வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்…

https://www.youtube.com/watch?v=Wb7bJ2foqmE&feature=youtu.be