பேய் படம் ஜானர் இன்னும் முடியவில்லை என்று சொல்லவே வாரத்துக்கு ஒரு படம் வந்து டரியல் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது…
அந்த வகையில்…சங்கிலிபுங்கில கதவ தெற திரைப்படம் ஒன்று…
வழக்கமாக பேய் குடி கொண்டு இருக்கும் வீட்டை ஜீவா வாங்கி விடுகின்றார்கள்… பேய் ஜீவா பேயை ஓட்டினாரா? அல்லது பேய் ஜீவா ஓட்டியதா? என்பதுதான்… இந்த திரைப்படத்தின் கதை. மோ என்று ஒரு திரைப்படம் அதே ஜானரில் வந்து இருக்கின்றது என்று சொல்ல போகின்றேன் என்று நினைக்கின்றீர்களா? இல்லை இதே ஜானர் இதே கதைதான் அதுவும்,, எனக்கு தெரிந்து ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர்… ஒரு ஆங்கில படத்தை பார்த்து விட்டு காவேரி டீக்கடையில் இருந்து கோடம்பாக்கம் முழுவதும் ஒரே கதையை சொல்லி இருக்க வேண்டும் போல… எல்லாரும் ஒரே கதைய எடுக்கறாங்க…
அப்படி என்ன கதையா? ஒரு வீடு அல்லது பங்களா? விற்க அல்லது வாங்க.. அதில் பேய் இருப்பதாக கதை கிளப்பி விட்டு அந்த பங்ளாவில் இருக்கும் பேயிடமே மாட்டிக்கொள்வதுதான் கதை.. இதே போல கதையை எத்தனை பார்த்து இருப்பீர்கள்.. அதனால் வழக்கம் போல அரைத்த மாவையே… ச்சே அறைத்த சட்டினியையே அறைத்து இருக்கின்றார்கள்..
ஆனால் படத்தின் ஒரே பலம் இரண்டு சீனுக்கு ஒரு காமெடி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை தூவி ரிலீப் கொடுக்கின்றார்கள்….
முக்கியமாக சூரி பால் விளையாட கூப்பிட்டு விட்டு கைகளை மேலே விடிய விடிய தூக்கிக்கொண்டு இருக்கும் அந்த காட்சி சான்சே இல்லை.. என்னை பொருத்தவரை சமீபத்தில் நான் பார்த்து ரசித்து சிரித்த காட்சி அதுவாகத்தான் இருக்கும்…முழு படத்தையும் எடுத்துக்கொண்டால்… வேறு வழியின்றி டிக்கெட் எடுத்து விட்டால்..? அங்காங்கே கிச்சி கிச்சி மூட்டுவதால் டைம் பாஸ் சினிமாவாக பார்த்து ரசித்து விட்டு வரலாம்..
ஜாக்கிசேகர்
https://www.youtube.com/watch?v=avdKZOp53ko&feature=youtu.be