‘யுடியூபில்’ சாதனையை படைத்து இருக்கிறது ‘வனமகன்’ படத்தின் டீசர்

ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கி வரும் திரைப்படம் ‘வனமகன்’. சமீபத்தில் ‘யூடியூப்’ இணையத்தளத்தில் வெளியான இந்த படத்தின் ஒரு நிமிட டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று, ‘யூடியூப் டிரெண்டிங்’ வரிசையில் முதலிடத்தை பிடித்து, புதியதொரு சாதனையை பெற்று இருக்கின்றது.

” வனமகன் படத்தின் டீசருக்கு ஜெயம் ரவி சாரின் ரசிகர்களும், பொதுவான சினிமா ரசிகர்களும் அளித்த அமோக வரவேற்புக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இதற்கு மிக முக்கிய காரணம், ஒளிப்பதிவாளர் திரு சாரின் எழில் மிகு காட்சிகளும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனதை வருடும் இசையும் தான் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் எங்களின் வனமகன் கவரும்” என்று உற்சாகத்தோடு கூறுகிறார் இயக்குநர் விஜய்.

Previous articlePlus or Minus Movie Pooja Stills
Next articleVivekananda Navaratri Day 6 Photos