எதிர்பார்த்ததை விட சிறந்த முறையில் உருவாகி இருக்கிறது ‘குற்றம் 23’ – அருண் விஜய்

“ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு.  நல்லதொரு கதை களமமும், அந்த கதை களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்…. அதன் படி   இயக்குநர் அறிவழகன்  செதுக்கி இருக்கும் குற்றம் 23. படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமான முறையில் உருவாகி நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக வர ,  பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார்.
சமீபத்தில்  குற்றம் 23 படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த எங்கள் இருவருக்கும், எப்படி எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை….  ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்பிற்கு, தற்போது  பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னை பாராட்டிய போது மிக உற்சாகமாக  இருந்தது…. குற்றம் 23 படத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்தி வருகிறார் இந்தெர் குமார். அவரது சிறப்பான பணி குற்றம் 23 படத்தை விளம்பரம் செய்வதிலும், வெளியிடுவதிலும் தொடரும்  என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது…..” என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் அருண் விஜய்.
Previous articleமீரா கதிரவன் விழித்திரு படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார்
Next articleMaragatha Naanayam was specially picked up from 90 other gems