ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத்தி ல் ராம்கி,சஞ்சீவ் கதாநாயகர்களாகவும், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி,சிங்கமுத்து, மதுமிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ், கலை பழனிவேல் ,படத்தொகுப்பு மகேந்திரன்.
இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,
ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு ஆனா நீ புதுஇயக்குனர் சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர் அனால் இப்போது ராம்கி,சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. இப்படத்தில் நடித்துள்ள ராம்கி,சஞ்சீவ் இருவரையும் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும். உண்மையில் நீங்கள் இதுவரை பார்க்காத ராம்கி,சஞ்சீவ் வை இப்படத்தில் பார்ப்பீர்கள்,மேலும் ஆங்கில படம் நவம்பர் 25ல் திரைக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.