ஒரு மன-நல மருத்துவரால் எந்த அளவிற்கு இயல்பியல் சக்திகளோடும் இயற்கையை கடந்த பாத்திரங்களோடும் (natural & supernatural) நிகர் நின்று ஒப்பிட முடிகிறது என்பதையும், எப்படி இளம் பெண்கள் மாய வலையொன்றில் சிக்கி காணாமல் போகிறார்கள் என்பதை சுற்றிகதை சுழல, இக்கதாப்பத்திரங்களுக்கிடையில் மன-நல மருத்துவர் என்னவாக திகழ்கிறார் என்பது வியப்பூட்டும் வகையில் நிமிடத்திற்கு நிமிடம் திகிலூட்டும் விதத்தில் திரைக்கதை அமைத்து கூறம் படமே “மீண்டும் வா அருகில் வா”
முதல் முறையாக கிளைமேக்ஸுக்குப் பின்பாக கதையின் கருவை வெளிப்படுத்தும் முற்றிலும் புதிதான கதையும் திரைக்கதையும் கூடிய “மீண்டும் வா அருகில் வா” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சி.
தயாரிப்பாளர் வி.என். ரஞ்சித் குமார் தனது பேனர் “லிபி சினி கிராப்ட்ஸ்” மூலம் இப்படத்தை தயாரிக்கின்றார்.
திரைக்கதையினை யூகிக்கும் குறைந்த பட்ஷ அவகாசத்தைக்கூட அளிக்காத இத்திரைப்படக் குழுவினர்கள் அனைவருமே, ஏறத்தாழ புது முகங்கள், அறிமுக கலைஞர்கள்.
திரைப்படத்தின் இயக்குனர் ஜெ ஜெய ராஜேந்திர சோழன். இவர் இயக்கும் முதல் திரைப்படம் இது. ஓளிப்பதிவு – கே. பி. பிரபு, இசையமைப்பாளர்கள் – விவேக், ஜேஷ்வந்த்.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ புகழ் “சந்தோஷ் பிரதாப்” கதாநாயகனாக மன-நல மருத்துவராக நடித்துள்ளார். மேலும் மற்றொரு கதாநாயகனாக ஆரவ், கதாநாயகியாக சாரா தேவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்
ஏராளமான ‘திகில் மற்றும் வேறு வகை’ என வரும் படங்களின் வரிசையில் சற்றே மாறி, ஒரு முழுமையான “திகில்/ஹாரர்” வகை படமாக “மீண்டும் வா அருகில் வா” படம் பேசப்படும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. இசை விரும்பிகளுக்கும் இளம் தலைமுறையினருக்கும் பிடிப்பூட்டும் வகையில் இவ்வருடத்தின் மிக அழகிய மெல்லிசை பாடல்களையும் இப்படம் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பு – வி.என். ரஞ்சித் குமார்
இயக்குனர் – ஜெ ஜெய ராஜேந்திர சோழன்
ஓளிப்பதிவு – கே. பி. பிரபு
இசையமைப்பாளர்கள் – விவேக், ஜேஷ்வந்த்
பாடல்கள் – பிரகாஷ் பிரன்சிஸ்
கலை – J.பார்த்திபன்
மக்கள் தொடர்பு – நிகில்
உடைகள் – சுந்தரி திவ்யா
சண்டைபயிற்சி – ரிவென்ஜ் ரஞ்சன்