கபாலி , மாயா , மெட்ராஸ் படங்களில் நடித்தவர் நடிகர் மைம் கோபி . ஜி மைம் ஸ்டூடியோ என்கிற பெயரில் நடிப்பு பயிற்ச்சி பள்ளியும் நடத்தி வருகிறார் .
ஆதரவற்ற குழந்தைகளுக்காக பல கலை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் . அதில் முக்கியமாக ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கத்தில் 20 குழந்தைகளை சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவைக்கு அழைத்து சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து குழந்தைகளுடன் சுற்றுலா பகுதிகளுக்கு செல்கிறார்கள் .
இதுபற்றி மைம்கோபி செல்லுகையில்…”ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமானப்பயணம் என்பது ஒரு கனவுபோல . அதை நனவாக்கும் ஆசையில் இந்த முயற்ச்சியை ஆரம்பித்து இருக்கிறோம் , இதில் குழந்தைகளுக்கு உயர்தரமான ஆடைகள் அணிவித்து சொகுசுக்கார்களில் அவர்களை அழைத்து சென்று விமானத்தில் பயணம் செய்து நட்ச்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து சுற்றுலாத்தலங்களுக்கு அவர்களை அழைத்து சென்று மகிழ்விக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்று நிறைவேறியிருக்கிறது .குழந்தைகள் அவ்வளவு மகிழ்வோடு இருக்கிறார்கள் .இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் எனது மைம்டுஸ்டுடியோ நிர்வாகிகள் , நண்பர்கள் , ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்கிறார் .