‘ஹே பெண்னே’ என்னும் ‘கட்டப்பாவா காணோம்’ படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டது சோனி சவுத் மியூசிக் நிறுவனம்

2016 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை கலந்த கற்பனை திரைப்படமாக உருவெடுத்து வருகிறது சிபிராஜ் – ஐஸ்வர்யா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும்  ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம். இயக்குனர் மணி சேயோன் (இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கட்டப்பாவா காணோம்’ படத்தின் முதல் பாடலான “ஹே பெண்னே…” பாடலை இன்று சோனி சவுத் மியூசிக் நிறுவனம் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
“இதுவரை நாம் சிபிராஜை அதிரடி, செண்டிமெண்ட், திரில்லர் மற்றும் வில்லன் காட்சிகளில்  தான் பார்த்து இருக்கிறோம்….ஆனால் அவருக்கு காதல் பாடல்கள் வெகு குறைவாக தான் அமைந்திருக்கிறது..எனவே அவருக்காக ஒரு சிறந்த காதல் பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே எங்கள் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் ‘ஹே பெண்னே பாடல்…” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் இயக்குனர் மணி சேயோன்.
“காதலை முற்றிலும் இந்த காலத்திற்கேத்த இசையோடு ஒருங்கிணைத்து உருவாக்கியதே எங்கள் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் ஹே பெண்னே பாடல். சிட் ஸ்ரீராம் மற்றும்  அலிஷா தாமஸ், ஐஸ்வர்யா குமார் ஆகியோர்   மீண்டும் ஒருமுறை இந்த பாடலில் தங்களின் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளனர்… முழுவதும் புதுமையான தோரணையில் எங்களின் ஹே பெண்னே பாடல் உருவாகி இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி