ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகிறது உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் எழில் படத்தின் படப்பிடிப்பு

வெற்றி என்னும் சொல்லுக்கு ஆணி வேறாக செயல்படுவது விடா முயற்சி தான். தன்னுடைய கடினமான உழைப்பாலும், சினிமா மீது வைத்திருக்கும் காதலாலும், தமிழ் திரை உலகில் வெற்றி பெற்று வருபவர் தயாரிப்பாளர் – நடிகர் உதயநிதி ஸ்டாலின். தயாரிப்பாளர், நடிகர் என அவருடைய வெற்றிகள் தமிழ் சினிமாவில் நீண்டு கொண்டே போகிறது  போகிறது. ஒரு நடிகராக பல சவால்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் வெற்றி கண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் காமெடி கதை களங்களை தேர்வு செய்து நடித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அதிரடி, செண்டிமெண்ட் என எல்லா வகை படங்களிலும் வெற்றிகளை பதித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரின் படங்கள் தான் அதற்கு சிறந்த உதாரணம். இப்படி தனித்துவத்தை பெரும் அளவில் விரும்பும் உதயநிதி ஸ்டாலின் தற்போது இயக்குனர் எழில் உடன் மீண்டும் ஒரு காமெடி திரைப்படத்திற்கு இணைந்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
 
“இந்த உலகத்தில் மிகவும் கடினமான ஒரு வேலை, அடுத்தவர்களை சிரிக்க வைப்பது தான். இதை நான் நடித்த காமெடி படங்கள் மூலமாக தான் உணர்ந்தேன்.  அப்படிப்பட்ட நகைச்சுவையை கையாளுவதில் சிறந்து விளங்கும் ஒரு இயக்குனர் எழில் சார். எந்த இடத்தில் டைமிங் காமெடி கொடுக்க வேண்டும், எந்த சீனில் கௌண்டர் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் அவர். அவருடைய இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வரும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமானது, இந்த படத்திலும் அதையே தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திரைப்படத்தை காண வரும் மக்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் இந்த படம் எந்த விதத்திலும் குறையை தராது..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பாசிட்டிவான உதயநிதி ஸ்டாலின். 
 
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெற்றி பாடல்களை வழங்கி வரும் டி இம்மான் இந்த படத்திற்கு இசை அமைப்பது மேலும் சிறப்பு. நகைச்சுவைக்கு சற்றும் பஞ்சம் இருக்காத வகையில் அமைய போகும் இந்த திரைப்படத்தின் கதா நாயகிகளாக ரெஜினா கேசன்ட்ரா அலெக்சாண்டர் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க உள்ளனர்.