ரம் திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ‘கபாலி’ டீசர் வைத்து கொண்டாடினர் படக் குழுவினர்

உலகெங்கும் காட்டு தீ போல் வேகமாக பரவி வரவும்நெருப்புடா‘  ரம்  திரைப் படக்குழுவினரையும் விட்டு வைக்க வில்லை. ரிஷிகேஷ், அஞ்சாதேநரேன், விவேக், மியா , சஞ்சிதாஷெட்டி,அம்ஜத்,அர்ஜுன் சிதம்பரம் என ஒரு உற்சாக குவியலே குடி இருக்கும் இந்தப் படத்தின்இறுதி நாள் படப்பிடிப்பு  வியாழன் அன்று நடந்தது. இடை விடாமல் 60 இரவுகள் பணியாற்றியசோர்வு இருந்தாலும், படப்பிடிப்பு  நன்றாக முடிந்து , படமும் நன்றாக வந்து இருக்கிறது என்கிறஉற்சாகம் இந்த இளம் படப்பிடிப்புக்கு குழுவினருக்கு இருந்ததால் அதை கொண்டாடவிரும்பினார். விவேக் சார் இருக்குமிடத்தில் ஐடியாவுக்கா பஞ்சம் . ஊரே கொண்டாட போகும்கபாலிடீசரை நாமும் பார்த்து கொண்டாடலாம் என்றார்.இந்த ஐடியா  நெருப்பு போல் கொண்டது. படப்பிடிப்பு குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கதயாரிப்பாளர் விஜயராகவேந்திராவும் உடனடியாக ஒரு பெரிய ஸ்க்ரீன் ஏற்பாடு செய்துகபாலிடீசர் பார்க்க ஏற்பாடு செய்தார்.  இதை பார்த்தவுடன்  படப்பிடிப்பை துரிதக் காலத்தில்முடித்த மகிழ்ச்சி மேலோங்கஉற்சாக குரல் எழுப்பிரம்படப்பிடிப்பு குழுவினர்  கபாலிடீசருக்குவரவேற்புக்கு கொடுத்தனர்.