அருந்ததி இணையாக புது முகம் ராம் குமார் இணையாக நடிக்கும் ‘அர்த்தநாரி’

இயக்குனர் பாலாவின் பாசறையில் பயின்ற இயக்குனர் சுந்தர இளங்கோவன் உருவாக்கும்  ‘அர்த்தநாரி’ அவர் பயின்ற பள்ளிக்கு நல்லப் பெயர் வாங்கி  தரும்.கதாநாயகி அருந்ததி இந்தக்  கதாப் பாத்திரத்துக்கு ஏற்ப நிறைய மெனக் கேட்டு இருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியின் கம்பீரத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னமும் உயரத்தை தொடுவார்.கதாநாயகன் ராம்குமார் முதல் படத்திலேயே இந்த அளவுக்கு நடித்து இருப்பது பெரிய விஷயம் எனக் கூறலாம்.  அர்த்தநாரி இசை வெளியீட்டுக்கு பிறகு படத்தின் பாடல்களால் படத்துக்கு சிறந்த முகவரிக் கிடைத்து இருக்கிறது.இசை அமைப்பாளர் செல்வ கணேஷ் , கபிலன் வைரமுத்துவின் வரிகளுக்கு அருமையாக இசை அமைத்து இருக்கிறார்.நாசர் சார் ‘அர்த்தநாரி’ படத்தில் நடித்து இருப்பது படத்தில் படத்துக்கு பெரிய கௌரவம் என்றே கூறுவேன்.  ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் ‘அர்த்தநாரி’ வெளியாகிறது.ரசிகர்களுக்கு ‘அர்த்தநாரி’ நிச்சயம் பிடிக்கும் படமாக இருக்கும் என்றுக் கூறினார் தயாரிப்பாளர் முத்தமிழன்.

Previous articleஅபிராமி மெகா மால் உன்னோடு கா
Next articleArthanaari Movie Stills