பிரபுதேவா தயாரிக்க லஷ்மன் இயக்கும் போகன்

368

பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ போகன் “

சென்ற வருடம் வசூலில் அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் நாயகன் ஜெயம்ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப்சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் போகன் படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

தனி ஒருவன் படத்தின் சூப்பர் ஹிட் கூட்டணியான ஜெயம்ரவி – அரவிந்த்ஸ்வாமி கூட்டணியும் கூடுதல் பலம் சேர்க்கிறது போகனுக்கு. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ம் தேதி பெரம்பூர் பின்னிமில்லில் துவங்குகிறது. பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ரோமியோ ஜூலியட் படத்தில் சூப்பர் ஹிட் பாடல் டண்டணக்கா..

போகன் படத்தில் “ டமால் டுமீல் “ என்ற பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. 20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. மிக பிரமாண்டமான படமாக பிரபுதேவா தயாரிக்கிறார்.

Previous articleமொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் சிங்கிள் டிராக் நாளை முதல்
Next articleகட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன் ???