கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன் ???

பாகுபலி படம் உலகம் முழுவதும் வெளியாகி அனைவரையும் கொஞ்ச நாள் ஒன்றை பற்றியே சிந்திக்க வைத்தது ,அதை பற்றியே யோசிக்க வைத்தது…??

படம் வெளியான அன்று முதல் இன்று வரை அந்த கேள்விக்கு விடை தெரியாமல் பலரும் பல கற்பனையில் ஒரு பதிலை தங்கள் மனதிற்கு பதிலாய் சொல்லி ஆறுதல் படுத்தி கொண்டு மற்ற வேளைகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

ஆம் படம் பார்த்த ரசிகர்களை சுட்டு எறித்து கொண்டு இருக்கும் அந்த கேள்வி ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றான் என்பதே.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் கேட்கப்படும் 15 கேள்விக்கு நிகரான எதிர்பார்ப்பு இந்த கேள்விக்கு அவ்வளவு பெரிய கற்பனை இந்த கேள்விக்கு பின் ஒளிந்துகொண்டு உள்ளது
அந்த கோடீஸ்வரன் ஆகும் டேனி பாயிலை தாண்டி மக்கள் யோசிகின்றனர் பாகுபலி படம் அவ்வளவு பெரிய சிந்தனையை ரசிகர்கள் இடத்தில் படம் கேட்டு உள்ளது.

ஒரு ஒரு ரசிகரும் ஒரு ஒரு வித யூகங்களை வைக்கின்றனர் ஒரு வேலை இதுவோ இல்லை அதுவோ என பல காரணங்களை ரசிகர்கள் தங்கள் மனதிற்குள் கேட்டு வருகின்றனர் அவர்களது சிந்தனை அந்த டேனி பாயிலை தாண்டிவிடும் நிலை..,,

அரசியல் நாச வேலையா ? ஒரு போர் மூளும் அபாயமா ? தனிநபர் பொறாமையா? அல்லது அதற்கு மேற்பட்ட எளிய ஏதாவது? என பல பக்கங்களில் மக்கள் விசராணை நடத்தி வருகின்றனர் என்றே சொல்லலாம்.

இது வெறும் படம் என்ற நிலையில் சிந்திக்க மக்கள் இல்லை அந்த அளவிற்கு பாகுபலி கதையில் மக்கள் ஆழ்ந்துள்ளனர் , அதனால் மக்கள் 2017 வரை மக்கள் காத்து இருப்பது மிக கடினம். இதனை முன் நிறுத்தி கல்ச்சர் மெசின் நிறுவனத்தை சேர்ந்த புட் சட்னி என்ற குழு ஒரு வீடியோவை தயாரித்து இந்த கேள்வியை மக்கள் இடத்தில் எழுப்பி உள்ளது. புட் சட்னி நிறுவனம் தங்களது வித்தியாசமான ஆக்கபூர்வமான சிந்தனை மூலம் தயாரிக்கும் வீடியோ ரசிகர்கள் இடையே பெரிதும் வரவேற்ப்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கேள்விக்கான முடிவு இரண்டு ஒன்று படம் வெளியாகும் வரை காத்து இருக்க வேண்டும் இன்னொன்று டேனி பாயிலை போல சிந்தனை கடலில் குதித்து யூகித்து சரியான விடையுடன் கரையை அடைய வேண்டும். இந்த வீடியோ ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பு பெரும் என்பது துல்லியமாக தெரிகிறது.

 

https://www.youtube.com/watch?v=UpUw5mvBj80