kadhalum kadanthu pogum movie review by jackiesekar

காதலும் கடந்து போகும் திரைவிமர்சனம்

சூது கவ்வும்  திரைப்படத்துக்கு பிறகு இயக்குனர் நளன் இயக்கி  அவருடைய ஆஸ்தான ஹீரோ   விஜய் சேதுபதி நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் காதலும் கடந்து போகும்.

கொரியாவில் வெளியான கேங்ஸ்டர் லவ்வர்  என்ற திரைப்படத்தின் அதிகார பூர்வ தழுவல்தான் இந்த திரைப்படம். இந்தி திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழ முக்கிய  காரணம் மடோனா ஸ்பெஸ்டின் என்றால்  அது மிகையில்லை..   பிரேமம் படத்தில் நடித்து பிரபலம் என்று தமிழ் மக்கள் சொன்னாலும் அவர் கப்பாடிவி போன்ற சேனல்களில் பாடல்களை பாடி பிரபலமானவர் என்பது இங்கே பலருக்கு அறிய நியாயம் இல்லை.

===

காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் ஒன்லைன்.

ரவுடிக்கும் ஐடியில் வேலை செய்யும் பெண்ணுக்கும்  காதல் சாத்தியமா?

===

காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் கதை என்ன?

விழுப்பும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பொண்ணு மடோனா  (யாழினி ) பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சென்னைக்கு வேலைக்கு வருகின்றார்… வந்த இடத்தில்  வேலை பறிபோகின்றது.. அதனால் வசதியான பிளாட் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒன்டு குடித்தன பிளாட்டுக்கு குடித்தனம் வருகின்றார்.. எதிர் வீட்டில் விஜய்சேதுபதி (கதிர்) ரவுடி வசிக்கின்றார்.. அவருக்கு யாரும் இல்லை அனாதை.. இரண்டு பேருக்கும் நட்பு மலர்கின்றது..  ரவுடிக்கு ஐடி பொண்ணுக்கு எப்படி நட்பு செட்டாகும்..?? அப்புறம் எப்படி காதல்? அது எப்படின்னு படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

====

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

விஜய்சேதுபதி தத்தி ரவுடி கேரக்டரில் பின்னி இருக்கின்றார்.. மிக முக்கியாமாக சூது  கவ்வும் திரைப்படத்தின் பேங்கில் மகளை பெற்றவரிடம் இருந்து பணம்  வாங்கி ஸ்டைலாக திரும்பும் காட்சி அருமையான  காட்சி அதே போல  இங்கே பாரில் அடிவாங்கி விட்டு சிங்கிள் ஷாட்டில் கிழவர் கையில்  இருக்கும் கண்ணாடி வாங்கி சிகரேட் பிடித்துக்கொண்டு இருப்பவனின் சிகரேட்டை பிடிக்கி  உதட்டில் பொருத்தி அவமானத்தை  தாங்கி கொண்டு  அந்த இடத்தை விட்டு கடக்கும் அந்த  காட்சி சான்சே இல்லை.

மடோனா… நடிப்பில் மிளிர்கிறார்  கொஞ்சமும் மிகையில்… குளத்தங்கரையில் அழுத்தமாக விஜய்சேதுபதியை கட்டி பிடிக்கும் அந்த காட்சி  சான்சே இல்லை.. எக்சிமோக்கள் கதை சொல்லி விட்டு  அந்த இடத்தை விட்டு கடக்கும் காட்சி அருமை.

சமுத்திரகனி தன் பாத்திரத்தை  சிறப்பாக ஏற்று நடித்து இருக்கின்றார். அது மட்டுமல்ல.. குத்தியவனை அப்படியே விட்டு விட்டு செல்லும்  அந்த இடம் கூட தத்திக்கிட்ட போய் என்ன  வீரத்தை காட்டிக்கிட்டு என்று நகரும்  அந்த காட்சி அருமை.

கேமராமேன் தினேஷ்கிருஷ்ணன் தன் வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்.. மடோனா காலையில் எழுந்து சென்றதும் விஜய் சேதுபதி வீட்டில் ஆடும் அந்த பாட்டில் ரிப்ளெக்டர் போர்டு எல்லாம் பிரேமில் வருவதை தவிர்த்து இருக்கலாம். பட்அந்தகுளத்து சீன் பில் குட்சீன் அதற்கான லைட்டிங்கும் அருமை

சந்தோஷ் நாராயாணன்  இசை படத்துக்கு பெரிய பலம். காகக்க போ பாடலும் அதனை படமாக்கிய விதமும் நடனமும் அருமை.

மடோனா காஸ்ட்யூம் அனைத்து அருமை..

==

படத்தின் டிரைலர் .

=====

படக்குழுவினர் விபரம்.

Directed by Nalan Kumarasamy
Produced by
C. V. Kumar
K. E. Gnanavel Raja
Screenplay by Nalan Kumarasamy
Based on My Dear Desperado
by Kim Kwang-sik
Starring
Vijay Sethupathi
Madonna Sebastian
Samuthirakani
Music by Santhosh Narayanan
Cinematography Dinesh Krishnan
Edited by Leo John Paul
Production
company
Thirukumaran Entertainment
Distributed by
Studio Green
Abi & Abi Pictures
Release dates
11 March 2016
Running time
136 minutes
Country India
Language Tamil

=====

பைனல்கிக்….

சினிமா இண்டஸ்ட்ரியில் 50 லட்சம் கொடுத்து  மை டியர் டெஸ்பர்டோ கதையை வாங்கியதைதான் சொல்லி  சொல்லி மாய்ந்து போகின்றார்கள்.. ஆனால் இந்த படம்  ஜெயித்து விட்டது. ஆனால் அதே ஐம்பது லட்சத்தை ஒரு கதைக்கு  இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறேன் நல்ல கதை சொல்லுங்கள் என்றால் குவிந்து விடாதா? என்பதே என் கேள்வி… ஆனால் படம் ஜெயித்து விட்டது.. பில் குட்டான சீன்கள் மூலம் படம் பார்க்கும் ரசிகனுக்கு மிக நெருக்கமாக  உள்ளது இந்த திரைப்படம். விஜய் சேதுபதிக்கு அடுத்த வெற்றி. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் காதலும் கடந்து போகும்.

===

படத்தோட ரேட்டிங்

ஐந்துக்கு முன்றேமுக்கா.

 

படத்தின் வீடியோ விமர்சனம்

 

https://youtu.be/zfeWKAaQfSo