‘ஜீரோ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

ஜீரோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா பிரசாத் லேபில் நடைபெற்றது…
இந்த படத்தில், அஸ்வின், ஷிவ்தா ஜோடி. சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜீரோ திரைப்படம், தமிழ் சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஹாரர் ஜானரில் இயக்குனர் ஷிவ் மோஹாவால் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையான காதல் என்பது தடைகளை எதிர்த்து பல ஜென்மங்களையும் தாண்டி வாழும் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தாணு, இயக்குனர் மகேந்திரன், வெற்றிமாறன் போன்றவர்கள் கலந்துக்கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்..
இயக்குனர் மகேந்திரன் பேசுகையில் எல்லாத்திரைப்படங்களையும் பார்க்கிறேன்… ஆனால் அத்தனையும் டிவிடியில் பார்க்கிறேன்.. அந்த திரைப்படங்கள் அவ்வளவுதான் ஒர்த்.. ஆனால் நல்ல திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்க்கிறேன்.
எந்த படமாக இருந்தாலும் அந்த திரைப்படத்தின் திரைக்கதை என்னவாக இருக்கின்றது… என்ன மாதிரி சொதப்பி தோல்விக்கு வழிவகுத்துள்ளார்கள் என்று பார்ப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்றால்.. ஜீரோ படக்குழுவினர் அனைவரையும் அவர் மனதார வாழ்த்தினார்.

புளு ஒஷன் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் மாதவ் மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து ஜீரோ படத்தை தயாரித்து விரைவில் வெளியிட இருக்கின்றார்கள்.