“Pichaikkaran” movie release march fourth and hit 500 screens

 

 

விஜய் ஆண்டனி — இயக்குனர் சசி இணையும் பிச்சைக்காரன் படம் வரும் மார்ச் நான்காம் தேதி உலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் வெளியாகிறது .

 
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க , சட்னா டைட்டஸ் நாயகியாக நடிக்க,  இயக்குனர் சசி இயக்கி இருக்கும் படம் இது 


ரிலீஸ் ஆகிற பல தமிழ் சினிமாக்கள் குறி வைப்பது வெள்ளி சனி ஞாயிறுவைதான். ஆனால் விஜய் ஆண்டனிக்கான ஒப்பனிங்கே புதன்கிழமை வரை போகும் .  அதோடு சசியும் சேரும்போது … இந்தப் படத்தின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட ஒன்று என்று நமக்கே புரியும்போது விநியோகஸ்தர்களுக்கு புரியாதா ?
 
கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் இருவரும் பிச்சைக்காரன் படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்து விட்டனர் . கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார் . 
 
படத்துக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படத்தின் முன்னோட்டததையும் நெஞ்சோரத்தில் பாடலையும் திரையிட்டனர்  
 
கே ஆர் பிலிம்ஸ் சரவணன் பேசும்போது ” இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம் . இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனி பாணி கமர்ஷியம் படம் . நான், சலீம் படங்களில் காதலையும் ஆக்ஷனையும்  விஜய் ஆண்டனி சிறப்பாக கையாண்டு இருந்தார் . இந்தியா பாகிஸ்தான் காமெடி . இந்தப் படத்தில் ஆக்ஷன் , காதல் , காமெடி எல்லாம் இருக்கிறது . அது இயக்குனர் சசியின் பாணியில் மெருகேறி சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
 
இயக்குனர் சசி பேசும்போது ”  படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்தேன் . எல்லோருக்கும் பிடித்து இருந்தது . எனினும் அண்மையில்  எனக்கு கொஞ்சம் பதட்டம் . ஏனென்றால் எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது . படத்தைப் பார்த்தார்கள் . மறுநாள் அவர்கள் ஆபிசுக்கு போனேன் . 
 
என்னை கார்த்திக் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். முன்னை  விடவும் உற்சாக வரவேற்பு . அப்போதுதான் எனக்கு நிம்மதி .  படத்தை  வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே டிக்கட் வங்கி பார்க்க வரும் எல்லோருக்கும் படம் பிடிக்கும் . 
 
இது பிச்சைக்காரர்களைப் பற்றிய  படம் அல்ல . சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை .  இதற்கு பிச்சைக்காரன் என்பதை விட பொருத்தமான டைட்டிலே  இல்லை .  சரவணன் வேறு யாராலும் முடியாத அளவுக்கு மிகப் பிரம்மாதமாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போகிறார் ” என்றார் 
 
விஜய் ஆண்டனி பேசும்போது ” என்னை இசை அமைப்பாளரா அறிமுகப்படுத்தியதே சசி சார்தான்,  டிஷ்யூம் படத்துல ! அவரோட படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன் . அவர் சொன்ன கதை இது . கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறி குமுறி அழுது விட்டேன்.
 
இந்தப் படத்தை தயாரித்து நடித்தர்ககப் பெருமைப் படுகிறேன் 
 
இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன் . என்னை பிச்சைக்காரர்கள்  மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரதத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள் . சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம் . அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது . 
 
மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா ; அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார் .. இப்படி பல நிகழ்வுகள் …நாம் அவர்களை மிக சுலபமாக கைகால் இருக்கே உழைக்க வேண்டியதுதானே என்று  திட்டுகிறோம் அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம் 
 
ஆனால் இன்னொரு வகையில் வாழ்வில் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான் . பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது . நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன்  . இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் .
 
இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது..  முதன் முதலாபட விநியோகம் பண்றீங்க ..  பிச்சைக்காரன் என்ற படத்தை வாங்கறீங்க?’ன்னு  கேட்டு இருப்பா ங்க . ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினர் .
என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை அவங்க இல்லன்னா நான் இல்ல .
 
இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு . நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ” என்றார்.