நாட்டு குடி மக்களுக்கோர் நற்செய்தி…

பெலிகானா என்ற புத்துணர்ச்சி பானம் நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தபட்டது…
 
ரசாயணகலவை இல்லாமல் சுத்தமான குடிநீர் துணைகொண்டுஇந்த பானம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும்… பத்தோடு பதினொன்றாக எல்லா புத்துணர்ச்சி பானத்தை போல இதனை ஒதுக்க முடியாது…
 
மதுவில் கலந்து குடிந்தால் உடல் நலத்தை கெடுக்கும் அனைத்து விஷயத்தையும் தடுப்பதோடு கிக் குறையால் வைத்துள்ளது என்பதுதான் இதன் சிறப்பு என்கின்றார் இதனை கண்டுபிடித்த டாக்டர் ராமன் சுந்தரவேலு…
 
மேலும் அவர் இந்த பானம் பற்றி விவரிக்கின்றார்.
 
….உதாரணமாக …
 
பீர் , பிராந்தி, விஸ்கி, வோட்கா, ரம் ,ஜின் போன்ற ஆல்கஹால் பானங்களும் கார்பன் சேர்க்கப்பட்ட மற்ற பல குளிர் பானங்களும் அடிப்படையில் அமிலத்தன்மை கொண்டவை. அவற்றின் pH.மதிப்பு (அமிலக் காரச் சமன்பாடு ) என்பது 2 pH முதல் 4pH.க்குள் அடங்கி விடுகிறது . இவ்வளவு குறைவான pH.மதிப்பு கொண்ட இந்த பானங்கள் ரத்தத்தை அமிலத்தன்மை வாய்ந்தவையாக மாற்றுகின்றன . இதனால் ரத்தம் பாயும் குழாய்கள் உட்பட எல்லா உறுப்புகளிலும் கரைவு அரிப்பு ஏற்படுகிறது . அதனால் நீண்ட கால உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன .
 
இந்த கரைவு அரிப்பாலும் உடல் செல்களில் தங்கும் வாயு மூலக் கூறுகளாலும் உடல் செல்கள் சீக்கிரம் இறக்கின்றன. இதனாலும் உடல் உறுப்புகள் தேய்மானம் அடைகின்றன .விளைவாக வயதுக்கு மீறிய முதுமை, உடல் பருமன், நீரிழிவு நோய் , ரத்த அழுத்தம், புற்று நோய் போன்ற – செல்களின் செயல்பாடுகளைப் பொறுத்து உருவாகும்– பல நோய்கள் ஏற்படுகின்றன.
 
இதனால்தான் மது அருந்துவது உடலுக்கும் உயிருக்கும் கேடு போன்ற வாசங்கங்களை மது பாட்டில்களிலும் மதுக் கூடங்களிலும் இடம் பெறச் செய்கின்றனர் .
 
காலகாலமாக , மதுப்பழக்கத்தால் உலக அளவில் வீணாக்கப்படும் மனித சக்தியை அளவிடவே முடியாது . அதுவும் 25 வயது முதல் 45 வயதுக்குடப்ட்ட இளைஞர்கள் சக்தியை அதிகம் கொண்ட நம் இந்தியா போன்ற நாடுகளில், மதுப் பழக்கத்தால் வீணாகும் மனித சக்தி அதற்கும் மேலே. அவர்கள் ஆக்கபூர்வமான வயதில் மது அருந்துவத்தால் தீய பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை இழக்கின்றனர் .
 
பொதுவாக தண்ணீர் சோடா , இனிப்புக் குளிர்பானகள் இவற்றுடன் சேர்ந்துதான் மது அருந்தப்படுகிறது. மதுவகைகளின் அமிலத் தன்மையை குறைக்கவே அவை கலக்கப்படுகின்றன அனால் அவை நாக்கு அளவில் மட்டுமே அந்த வேலையை செய்கின்றன. உண்மையில் உடல் உறுப்புகளை அரித்துக் கரைக்கும் மதுவின் 4 pH என்ற அமிலத் தன்மையில் மேற்சொன்ன கலக்கிகள் எந்த மாற்றங்களையும் செய்வது இல்லை
 
ஒரு நல்ல ஆரோக்கிய பானம் என்றால் அதன் pH தன்மை 7pH முதல் 11 pH.வரை இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் ரத்தத்தில் அமிலத்தன்மை ஏற்படாது . தவிர இரத்தத்தின் pH. அளவு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பாதுக்காப்பான அளவான 7.35 to 7.45pH.என்ற நிலையிலேயே நல்லபடியாக தொடர்ந்து இருக்கும் . அப்போதுதான் மனித உடலானது பொது மற்றும் தோற்று நோய்களுக்கு ஆளாகாமல் ஆரோக்கியமாக இருக்கும் .
 
4 pH மட்டுமே உள்ள, அமிலத்தன்மை நிறைந்த உடலுக்கு ஆபத்தை தரும் மதுவோடு, பெலிகானா டி டி கலந்து அருந்தும்போது , அது மதுவின் pH அளவை 10.5 என்ற அளவுக்கு உயர்த்தி அமிலத் தன்மையை நீக்கி , உடல் உறுப்புகளை கரைத்து அழிப்பதை தடுக்கிறது .
 
மிக முக்கியமாக கொஞ்சம் கூட போதையையோ உற்சாகத்தையோ பாதிக்காமல் .! அதுதான் இதன் பெரிய சிறப்பம்சம் . ஆம்! பெலிகானா டி டிகலந்து அருந்துவதால் மது தரும் போதை , சந்தோசம், உற்சாகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
 
உலக அளவில் உள்ள குடி நீர் தயாரிப்பு நிறுவனங்கள் தண்ணீரை 6 -7 pH. என்ற அளவுக்கு மென்மைப் படுத்த சோடியம் பை கார்பனேட் என்ற வேதிப் பபொருளை பயன்படுத்துகின்றன. இதற்கு மேல தண்ணீரை மென்மைப் படுத்தவேண்டுமானால் ரசாயனப் பொருளை பல மடங்கு பயன்படுத்தவேண்டும் . இது உடலுக்கு நல்லதல்ல . ஒரு அளவுக்கு மேல் உடலுக்குள் இவை சேர்ந்தால் அவை உடலுக்குள் தங்கி நோக்கத்துக்கு மாறாக அமிலத் தன்மையை பெருக்க ஆரம்பித்து விடும் .
 
அதாவது இந்த சோடியம் கார்பனேட் , பை கார்பனேட் எல்லாம் தண்ணீரின் அமிலத்தன்மையை தற்காலிகமாக மட்டுமே மாற்றும் . ஆக இப்படி உருவாகி வரும் தண்ணீரையோ அல்லது அந்த தண்ணீரால் உருவான சோடா முதலிய பானங்களையோ மதுவுடன் கலந்து அருந்தும்போது , மதுவால் ஏற்படும் பாதிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாகும்.
 
இன்றைய நிலையில் நுண்ணுயிரியல் ரீதியாக,சில நாட்களுக்கு மேல் பாதுகாப்போடு இருக்கக் கூடிய குளிர்பானங்களை ,தயார் செய்யு வேண்டுமானால் அதில் தண்ணீரோடு பதனப்படுத்தும் பொருட்களையோ செயற்கை உப்புகளையோ சேர்த்தால்தான் முடியும் என்ற நிலை
 
உடலுக்கு தீங்கு செய்யும் அந்த பொருட்கள் இன்றி தயாரிக்கும் சக்தி, இன்றைய நவீன தொழில் நுட்பங்களுக்கு கிடையவே கிடையாது.
 
அதே போல இவ்வளவு கெமிக்கல்களை பயன்படுத்தியும் கூட தண்ணீரின் pH அளவை தொடர்ந்து ஒரே நிலையில் பாதுகாக்கும் திறனும் இந்தத் தொழில் நுட்பங்களுக்கும் இல்லை . தண்ணீரின் ORP அளவை 24முதல் 36 மணி நேரங்களுக்கு மேல் தக்க வைக்கும் தொழில் நுட்ப அறிவும் நமக்கு இல்லை .
 
இந்த நிலையில்தான் ஆல்கஹாலின் அமிலத் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தயார் செய்யப்பட்ட பானமாக, எங்களின் கண்டுபிடிப்பான பெலிகானா D D வருகிறது .
 
எந்த விதமான செயற்கைப் பொருட்களின் சேர்க்கையும் இன்றி பெலிகானா D D , அதை சாதிக்கிறது என்பதுதான் இதில் உள்ள அதிசயம் .
 
பெலிகானா D D எந்த விதமான ரசாயனங்களோ , காரத் தன்மை பொருட்களோ, பதப்படுத்தும் பொருட்களோ , ஆக்சிஜன் ஏற்றத் தடுப்பியோ இன்றி … உடலுக்கு கெடுதல் செய்யும் மதுவை…. சாதுவான பானமாக மாற்றுகின்றது.
இந்த பானத்தை தயாரித்து இருப்பவர் அக்மார்க் தமிழர் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராமன் சுந்தரவேல்.
NABL எனப்படும் National Accreditation Board for Laboratories அமைப்பின் அங்கீகாரம் பெற்ற SGS குழுமம் மற்றும் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் போன்ற இன்டர்நேஷனல் மற்றும் இந்திய ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பாய் மற்றும் தரக் கழகத்தின் ( Food Safety and Standards Authority of India) மூலம் சான்றிதழும் அனுமதியும் தரப்பட்டு உள்ளன.
 
இந்த பெலிகானா D D பானத்தை தண்ணீர் போல அருந்துவதும் பாதுகாப்பானதே .
 
மது வோடு கலப்பதற்கு என்று உள்ள பானங்களின் குறைபாடுகளையும் பற்றாக்குறையையும் சரி செய்வதோடு மக்களுக்கு ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த பெலிகானா DD பானம் கண்டு பிடிக்கப்பட்டதன் நோக்கம் என்கின்றார்… டாக்டர் ராமன் சுந்தரவேலு…
 
நேற்று செய்தியாளர் சந்திப்பில் நடந்தவற்றை உங்களோடு பகிர்ந்துள்ளேன்… இந்த பானத்தின் சாதக பாதகங்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த கேள்விகள் அதற்கான பதில்கள் தீர்வுகள், விவாதங்கள் இனிமேல்தான் தெரியவரும்…இப்படி ஒரு பானம் மார்க்கெட்டுக்கு வந்து இருக்கு அவ்வளவுதான்..
 
நண்பர்களே…
 
ஒரு புல் ரம் பார்சல் என்று உடனே குடிக்க கிளம்ப வேண்டாம்… குடி குடியை கெடுக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்.