பொதுவாக வருடத்துக்கு சராசரியாக வெளியாகும் 250 தமிழ் ததிரைப்படங்களின் அனைத்து பிரஸ் மீட்டுகளிலும் ஒரு ஒற்றுமையை காணாலாம்… வித்தியாசமான கதைக்களம்… நிறைய உழைப்பை கொடுத்து இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கின்றோம்… இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்…இது போன்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது… யாரும் தொடாத சப்ஜெக்ட்… பின்னனி இசைக்கு பெல்ஜியம் சென்று இருக்கிறோம்… என்று கலர் கலராக உணர்ச்சி வசப்பட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைப்பட குழுவினர் பேசுவார்கள்…
நாமும் ஆர்வத்தோடு படம் வெளிவரும் நாளில் முதல் ஷோ ஆர்வத்தோடு பார்க்கபோய் மொக்கை வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆன கதைகள் தமிழ் சினிமாவில் ஏராளம்…
ஆனால் ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழக்கம் போல வித்தியாசமான திரைப்படம் என்று சொன்னலும்… நிஜமாகவே வித்தியாசமான திரைப்படம்தானோ என்று எண்ணும் அளவுக்கு அதன் மேக்கிங்அதன் இசை கலர் டோன் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தது.. அது மட்டுமல்ல…
ஜில் ஜங் ஜக் நடிகர் சித்தார்த் நடித்து தயாரிக்கும் திரைப்படம். பிப்பரவரி 12 ஆம் தேதி வெண்திரையை முத்தமிட இருக்கின்றது…
படத்தில் ஹீரோயினே இல்லை… அதே போல விழா மேடையில் காம்பயர் செய்ய ஒரு பெண்ணை அழைத்து வருவார்கள்… அதை கூட தவிர்த்து விட்டு சித்தார்த்தே காம்பயர் செய்தார்…
அதனாலே மேடை சேவல் பண்ணையை போல காட்சி அளித்தது..
அசிஸ்டென்ட் டைரக்டர்கள் குழுவை மேடையில் ஏற்றி மரியாதை செய்தது சிறப்பு.
நடிகா ராதாரவியின் பேச்சு கலகலப்பாக்கியது …
வித்தியாசமான கதை கதைக்களம்.. ஜில் ஜங் ஜக் திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று தன் பேச்சினுடே நம்பிக்கை தெரிவித்தார் புதுமுக இயக்குனர் தீரஜ் வைத்தி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த்.
வித்தியாசமான படம் என்று வெற்றி வாகை சூட ஜாக்கி சினிமாஸ் படக்குழுவினரை வாழ்த்துகிறது.