பொதுவாக பைட் மாஸ்டர்கள் படம் தயாரிக்கமாட்டார்கள்… அப்படியே தயாரித்தாலும்… அதில் நாயகனாக நடிப்பதோடுஆக்ஷன் படமாக எடுத்து பார்ப்பவர்களை டரியல் ஆக்கிவிடுவார்கள்… ஆனால் தமிழ் சினிமாவின் பிரபல பைட் மாஸ்டர் சூப்பர் சூப்புராயன் மாஸ்டரின் மகன் திலிப்சுப்புராயன் மாஸ்டர் தயாரிப்பில் விரைவில் வெளி வர இருக்கம் அஞ்சலை திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது..
விமல் , பசுபதி, நந்திதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்… இந்த திரைப்படத்துக்கு இசை மலையாள திரையுலகில் புகழ் பெற்று விளங்கும் கோபிசுந்தர் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்..,..
இந்த திரைப்படத்தை தங்கம் சரவணன் இயக்கியுள்ளார்…. 1913 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அஞ்சல என்ற டீக்கடையையும்… அதன் சுற்று வட்டார மனிதர்களையும் அந்த டீக்கடைக்கும் அவர்களுக்கும் உள்ள பினைப்பையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கி திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்..
அஞ்சல திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக நெகிழ்ச்சியாக நடைபெற்றது… திலீப் மாஸ்டர் மற்ற படங்களில் சண்டைபோட்டு அதில் வரும் பேமன்ட்டில் இந்த திரைப்படத்தை வெகு சிரமங்களுக்கு இடையில் எடுத்துள்ளார்… அதை விட பெரிய விஷயம் சுப்பராயன் மாஸ்டருக்கு தமிழ் மொழி மீது உள்ள ஈடுபாடு விழாவில் கலந்து கொண்டவர்களை சிலிர்க்க வைத்தது என்னவோ நிஜம்..
விழாவில் பேசிய படம் சம்பந்தபட்ட அத்தனை பேரும் இதனை உணர்வு பூர்வமாக தெரிவித்தார்கள்.. என்பதுதான் சிறப்பு ஆரோ சினிமஸ் மகேஷ் இந்த திரைப்படத்தை வாங்கி ரிலிஸ் செய்கின்றார்..
follows on
https://www.facebook.com/JackieCinemas
https://twitter.com/JackieCinemas