Happy birthday nayanthara

 

நயன் என்று தமிழ் ரசிகர்களால்   செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில்  பிறந்தார் நயன்…  டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும்.

தற்போது  தனது 31வது  வயதில்அடி எடுத்து வைக்கும் நயன்… தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளில் ஹாட் ஹீரோயின்  யார் என்றால் நயன்தாரா என்றால்  அது மிகையில்லை.… இந்த ஆண்டு தமிழல் இவர் நடிப்பில் வெளியான  தனிஓருவன், மாயா, நானும் ரவுடிதான்  ஆகிய மூன்று படங்ளுமே  ஹேட்ரிக் வெற்றி பெற்றவை…

2005 ஆம் ஆண்டுஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்வைத்தாலும்…. பெரிய அளவில்  சோபிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும்…  ஆனால்  அந்த படத்தில் ஒரு வார்த்தை  கேக்க  பாடலில்  பச்சைக்கலர் தாவணியும் நீல ஜாக்கெட்டில் தமிழ் ரசிகர்களின்  கவனம் ஈர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

 

கஜினி படம் வெற்றி என்றாலும் நயனுக்கு என்று பெரிய பெயரை பெற்ற தரவில்லை..

2006 ஆம் ஆண்டு  வெளியான வல்லவன் திரைப்படம்   சிம்பு நயன் உதட்டு முத்தம்  பரபரப்பை  உண்டு பண்ணியதோடு அவர்கள் காதலை பற்றி பரபரபப்பாக தமிழக  பத்திரிக்கைகள் எழுதி தீர்த்தது..

 

2007 ஆம் ஆண்டு வெளியான   அஜித்தின் பில்லா திரைப்படம்… கருப்பு பிகினியில் தம்ப்ரெய்டர்  ஏஞ்சலினா ஜூலி போல நடந்து வர தமிழக ரசிகர்கள் மிரண்டு போனார்கள். எந்த உடை அணிந்தாலும்  பொருந்தி போகும் நடிகை  நயன் மட்டுமே..

2008 ஆம்  ஆண்டு வெளியாக யாராடி நீ மோகினி திரைப்படம்  மிரண்டு கிடந்த தமிழ்ரசிகர்கள் நெஞ்சில் பப்பிள்கம்  போல ஒட்டிக்கொண்டார்…  கையில் ஓட்டிக்கொண்டு பப்பிள்கம்மை எளிதில்  பிரித்துக்கொண்டு வருவது கடினம்.. நயனும் அப்படித்தான்…தமிழக ரசிகர்கள் இதயத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தார்..

அதன் பின்  அவர் நடித்த படங்கள் பெரியஅளில் வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும்..பாஸ் என்கிற் பாஸ்கரனில் நிமிர்ந்து நின்றார்.. 2011 ஆம் ஆண்டு நயனுக்கு பிரபுதேவாவுக்கும் காதல் கல்யாணம் என்று  செய்தி பரவ… ராமராஜ்யம் திரைப்படம்தான் கடைசி திரைப்படம் என்று சொன்னார்கள்…

ஆனால் அந்த காதலும் விடைதெரியா  கேள்விகளோடு  முறிந்து போக… மீண்டும் பீனிக்ஸ் பறவை போல எழுந்து  நின்று முன்னனி  பத்து வருடத்தில் முன்னனி நாயகியாக இருக்கின்றார்.. அதுமட்டுமல்ல …ஒரு போதும்   பர்சனலையும் சினிமாவையும் அவர் குழப்பிக்கொண்டதே இல்லை… அதனால்தான்  பாண்டிராஜ் இயக்கத்தில்  சிம்புவுடன்  இது நம்ம ஆளு திரைப்படத்தில் நடிக்க  ஒப்புக்கொண்டார்.

 

நயனின் சின்சியாரிட்டி மனித நேயம் திரையுலகில் வியந்து  பேசும் விஷயம்.. ஒரு முறை லைட்மேனுக்கு அடிபட்டு  மயக்கமாகி கிடக்க நயன்தாரா ஓடிச்சென்று  அவரை தன்மடியில் ஏந்திக்கொண்டு முதலுதவி செய்து அவர் மயக்கம் தெளிந்த பின்னரே    நடிக்க வந்தார்  என்று  நயனை பற்றி  தமிழ் திரையுலகம் பெருமையாக பேசிக்கொள்கிறது..

ஒரு படம் ஓடும் மூன் அவரை பற்றி கிசு கிசுவரும்…  படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருக்கும் போது  கண் காது மூக்கு வைத்து பேசுவார்கள்….  படம் வெளியான பத்து  நாளில்  அந்த காதல்   உண்மைதான் என்று செய்தி வரும்.. படம்  வெளியாக 50  நாள் வெற்றிகரமாக  ஓடியதும்  நயனின்  காதல்முறிந்து விட்டதாக   தெரிவிப்பார்கள்.…, இப்படித்தான் நயனின் காதல்கள் முறிந்து உள்ளன…

மிக மென்மையான  அவர் மனதை எளிதில்  காதல் முலம் பூசி காரியத்தை  சாதித்து கொள்கின்றார்களோ என்ற ஐயம்  தமிழ் திரையிலகில் வெகுகாலமாக நிலவிவருகிறது..

எதிர்காலத்தில்  நயனுக்கு இன்னும் சிறப்பான வாழ்வும் எல்லையில்லாத  ஆனந்தம் பெற   ஜாக்கிசினிமாஸ் சார்பாக நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா…

 

#happybirthdaynayanthara

 

 

https://youtu.be/JQYNGaZipIc

follows on

http://www.jackiesekar.com

http://www.jackiecinemas.com/

https://www.facebook.com/JackieCinemas

https://twitter.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas