தல அஜித்தின் வேதாளம் கமர்ஷியலாக பின்னிபெடலேடுத்துக்கொண்டு இருக்க… வேதாளம் படத்தை முடித்த கையோடு தல அஜித் திருப்பதிக்கு சென்று எழுமலையானை தரிசித்து விட்டு வந்தது அனைவரும் அறிந்த செய்திதான்.. ஆனால் தனது மூட்டுவலிஅறுவை சிகிச்சையை கடந்த வியாழக்கிழமை சத்தமில்லாமல்முடிந்துக்கொண்டார் என்பது பலருக்கு தெரியாத செய்தி.…
வேதாளம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும் போது … அவரது கால் மூட்டில் அடிபட்டதும்… மூட்டில் வலி பொருக்க முடியாமல் தவித்த அஜித்துக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்று பரிந்துரைக்க…. இந்த மாதம் 20 தேதிக்கு மேல்தான் ஆப்பரேஷன் என்று நாள் குறித்தாலும் கால் மூட்டில் பின்னி எடுத்த அதிகப்படியான வலி வெகு சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வைத்துவிட்டது…
இன்னும் மூன்று மாதம் கட்டாய ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்… தல உடம்பில் எட்டுக்கு மேற்ப்பட்ட ஆப்பரேஷன்கள் நடத்தப்பட்டு இருந்தாலும் மீண்டும் புயல் போல வருவார் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளார்கள்..
FOLLOWS ON
https://www.facebook.com/JackieCinemas
https://twitter.com/JackieCinemas
https://plus.google.com/+JackieCinemas
https://www.youtube.com/JackieCinemas
https://youtu.be/iLfJ3dlMeiY