Uttama Villian Bagged Awards in Los Angles International Film Festival

608

 

 

இயக்குனர் லிங்சாமி அவர்களின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து,  சமீபத்தில் வெளியான திரைப்படம் உத்தமவில்லன்….இந்த திரைப்படத்தை  நடிகரும் இயக்குனருமான  ரமேஷ் அரவிந் இயக்கினார்….

கமலஹாசன்,ரமேஷ் அரவிந், இருவரின் குருநாதர்  இயக்குனர் பாலச்சந்தர் இந்த திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அது அவரின் கடைசி திரைப்படம் என்பதும் குறிப்பிடதக்கது…

உத்தமவில்லன் திரைப்படத்தில்  கமல்ஹாசன், பூஜா குமார், பார்வதி, நாசர், ஊர்வசி என்கே விஸ்வநாத் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்… சமீபத்தில் அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்  உத்தமவில்லன் திரைப்படம் திரையிடப்பட்டது…. இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் (கமல்ஹாசன்), சிறந்த பின்னணி இசை (ஜிப்ரான்), சிறந்த பாடல் (ஜிப்ரான்), சிறந்த சவுண்ட் டிசைன் (குணால் ராஜன்) என 5 விருதுகள் அள்ளியது… அது மட்டுமல்ல ரஷ்யன் திரைப்பட விழாவிலும் உத்தமவில்லன் திரைப்படம் கலந்துக்கொண்டு இசையமைப்பாளர் ஜிப்ரனுக்கு சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது..

Previous articlevijay sethupathi gear up new title dharmadurai
Next articleThala ajith kumar knee operation successfully done