ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் Rk சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க
சீனு ராமசாமி இயக்கும் திரைப்படம் “தர்மதுரை”
சலீம் வெற்றித் திரைப்படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் Rk சுரேஷ் தயாரிக்கும் படம் ”தர்மதுரை” இப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.
இடம் பொருள் ஏவல் படத்திற்க்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார், ஒளிப்பதிவு- சுகுமார், இசை- யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்- காசி விஸ்வநாதன், கலை- பத்மாமகன்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.