ஏசிமெக்கானிக்காக சென்னை சவேரா ஓட்டலில் ஒன்றரை வருடம் பகுதி நேர வேலை..
சென்னை ரேடியோவில் முதல் முறையாக சினிமா ஒளிச்சித்திரம் வழங்கியவர்.
ஆடியோ என்ஜினியர்,
அதுவே பாலசந்தரிடம் ஒரு சீனில்நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..
6000 முறை நாடகம் போட்டதோடு இன்னமும் நாடகங்கள் வார வாரம் மேடை ஏற்றுபவர்…
50 முறை ரத்ததானம் கொடுத்தவர்…
41 வருடங்கள் கலை உலக பணி,
பாரதிய ஜனதா கட்சி தமிழக கொள்கை பரப்பும் பிரபலம்
சென்சார் போர்டு உறுப்பினர்
நாடக நடிகர் , இயக்குனர், என்று பன்முக திறமைகொண்டவர்.
மாற்றுக்கருத்து இருப்பினும் மாற்றுகட்சியினரிடம் நட்பு பாராட்டும் நல்லவர்…
அதிமுகவில் எம்எல்ஏ பதவி வகித்தாலும் டெம்போ டிராவலர் டயர் தொட்டுக்கும்பிடாத ஒரே எம்எல்ஏ,.
அவர்தான் எஸ்வி சேகர் அவர்கள்.…
வீட்டில் ஜாக்கி சினிமாசுக்காக ஒரு எபிசோட் எடிட் செய்துக்கொண்டு இருந்தேன்…
சின்ன மாப்ளே பெரியமாப்ளே…. நாடகம் வாணிமகாலில் என்று முகநூலில் நண்பர் எஸ்வீ சேகர் அவர்கள் பகிர்ந்து இருந்தார்கள்…
நகர தெருக்களில் சுவரொட்டி பார்த்தேன்… வாழ்த்துகள் என்று வாழ்த்தினேன்.. அதற்கு பதிலாக எஸ் வீ சேகர் அவர்கள். உடனே எனது விருந்தினராக நாடகத்துக்கு வர வேண்டும் என்றார்..
கடந்த ஞாயிறு வாணி மகால் மாலை சின்ன மாப்ளே பெரிய மாப்ளே நாடகத்துக்கு சென்றேன்.
மேடையின் பின்புறம் உள்ள ரிகர்சல் அறையில் இருவரும் பலதும் பேசிக்கொண்டு இருந்தோம்..
முக்கிய வேடத்தில் நடித்தவர் இடுப்பை உடைத்துக்கொண்டு வந்திருந்தார்.. அவருக்கு மாற்றுஇல்லை.. ஆனாலும் நடிக்க முடியம் என்றார்…
6000 நாடகங்கள் மேடை ஏற்றினாலும் ரிகர்சல் சரியாக நடக்கின்றது… நாடகம் ஆரம்பிக்கும் முன் செட் பிரப்ட்டிக்கும் கடவுளுக்கும் பூஜை போட்டு வணங்குகின்றார்கள்..
மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு குபிர் சிரிப்பு நாடகத்தை ரசித்தேன்… அதை விட நாடகம் முடிந்த உடன் எஸ் வீ சேகர் அவர்கள் புதிய நல்ல நாடகங்களை அறிமுகப்படுத்தியதோடு நாடகங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களை பார்த்துக் கேட்டுக்கொண்டார்…
விடைபெற்ற போது.. அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்.. நாளை காலை ஜாக்கி சினிமாசுக்காக பேச வேண்டும் என்று சொன்னேன்… அவசியம் வர சொன்னார்…
காலையில் பதினோரு மணிக்கு ஆரம்பித்த பேட்டி மதியம் ஒன்றரை மணிக்கு முடிந்து…
பாலசந்தர், கமல், நதியாஇ சுஜாதா, கிரேசி மோகன், கோவனின் கைது, மாட்டிறைச்சி, இந்திய சென்சார் போர்டு, என்று பலதும் பேசினோம்.. அவைகள் வீடியோவாக பகுதி பகுதியாக உங்கள் முன்…
முதல் பாகம்…
==============
இரண்டாம் பாகம்.
==========
மூன்றாம் பாகம்
=============
நான்காம் பாகம்.
https://youtu.be/8eJgFzADPsk
வீடியோக்கள் பிடித்து இருந்தால் நண்பர்களிடத்தில் ஷேர் செய்யவும்..
ஜாக்கிசினிமாஸ் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்…
நன்றி.
=============
ஜாக்கிசேகர்
04/11/2015