Inji Iduppazhagi Audio Launch | இஞ்சி இடுப்பழகி திரைப்பட ஆடியோ வெளியீடு

 

 

60 கோடி ரூபாய் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்துக்கு ஆர்யா, செல்வராகவன்  அனுஷ்கா, போன்றவர்களை  நம்பி  செலவு செய்து  நட்டத்தை சந்தித்த நிறுவனம் பிவிபி சினிமா நிறுவனம்..…

விட்ட இடத்தில் மட்டுமே பிடிக்க முடியம் என்பது சினிமா  என்கின்ற பரமபத ஆட்டத்தின் நியதி…… ஆதே ஆர்யா அனுஷ்கா  ஊர்வசி, பிரகாஷ் ராஜ் மற்றும் சோனல் சவுகான் ஆகியோர் நடிப்பில்  இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில்  தாயரித்துள்ளனர்..

தெலுங்கில் சைஸ் ஜீரோ என்று இந்த  திரைப்படத்துக்கு பெயரிட்டுள்ளதோடு…   இந்த படத்தின் நாயகி அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ ஏற்றி  உடல் பருமன்  உள்ள பெண்ணாக  நடித்திருக்கிறார்.  அது மட்டுமல்ல.. சின்ன வீடு திரைப்படத்துக்கு பிறகு உடல்பருமன் விஷயத்தை தமிழ் சினிமா கையிலெடுத்துள்ளது…

 

இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிகர் ஜீவா  கவுர வேடத்தில் நடித்துள்ளார்… அதே போல தெலுங்கு பதிப்பில் ஜீவா  பாத்திரத்தில்  நாகர்ஜூனா நடித்துள்ளார்.

 

 

தெலுங்கு இயக்குநர் பிரகாஷ் கொவேலாமுடி இயக்கியிருக்கிறார். இவர்  தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் ராவ் இவரின் தாத்தா… இவரின் அப்பா… தெலுங்கு திரையுலகின் புகழ்மிக்க இயக்குனர்  ராகவேந்திரா ராவ் அவர்களின் புதல்வன் ஆவார்… அது மட்டுமல்ல.. இந்த திரைப்படத்தின் கதையை  இயக்குனரின் மனைவியே எழுதி இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது….

 

தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தெலுங்கின் மூத்த இசையமைப்பாளர் மரகதமணி.

சத்தியம் திரையரங்கில் நடந்த இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்  தமிழ் திரையுலகின் முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்..