அஜித்தை நான் திட்டினேனா?? கருணாஸ் விளக்கம்

 

நடிகர் கருணாஸ் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்….

என்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.

யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்த்தை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இது பற்றி நாளை கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்.

என்னை பற்றிய தவறான செய்திகளை கேள்விபடும் போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியபடுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்,

கருணாஸ்
நடிகர்,
துணை தலைவர் – தென்னிந்திய நடிகர் சங்கம்