சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும்
கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில்,
நலன் குமாரசாமி இயக்கத்தில்
விஜய் சேதுபதி நடிக்கும்
“காதலும் கடந்து போகும்”
அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த சீவி குமார், கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் சூதுகவ்வும் வெற்றி பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றார்.
“காதலும் கடந்து போகும்” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.